பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றன் 105. எத்தகைய இடருற்ற காலத்திலும் தம் விலகலங்கித். தளராது வாழ்வர் ; அவ்வாறின்றி மனத்தை அடக்காத - வர்க்கே, இது தீது ; இது கன்று என்ற எண்ணம் உண். டாம்; தீதும், கன்றும் மனம் தரும் மாற்றங்கள் என்ற எண்ணமிலா கார்க்கே, அவை பிறரால் உன்டாகின்றன என்ற எண்ணமும், அதைத் தொடர்ந்து, தீது செய்தார் மாட்டுச் சினமும், என்று செய்தார் மாட்டு அன்பும் தோன்றுதலும் உண்டாம் ; தீமையால் துன்புறுவது போலவும், நன்மையால் அவை தணிதல்போலவும் எண்ணு. வோரும் அவரே உள்ளத்தை ஒருவழி சிறுத்திய உரனு டையார்க்கே, தோற்றமுண்டேல் மரணமுண்டு என்ற எண்ணமும், இறப்பது இவ்வுலகின் இயற்கை ; அதுகண்டு அஞ்சுவது அறியாமை என்ற எண்ணமும் எழும்; அவரே, வாழும் வசதிபலபெற்று வாழ்ந்தக்கால், அவ்வாழ்க்கை யினை இனிது எனப் போற்றவேண்டும் என்ற எண்ணமோ, அவ்வாழ்க்கையில் வளம் குறைந்தக்கால், இவ்வாழ்க்கை: கரகம் போன்றது; இத்துன்பத்தில் உழன்று வாழ்வதிலும் காடடைவதே நன்று என்ற துறவுள்ளமோ கொள்ளார்; அத்தகையாரே, வளம் பலபெற்று வாழ்ந்தாரின் வாழ்வின் பெருமை கண்டு வாழ்த்துவதோ, பொருளின்றி வறுமை யுற்ருர் இழிகிலே கண்டு இகழ்வதோ செய்யார் ; அவர்க்கு எல்லாம் ஒன்றே ; ஏழையும் ஒன்றே செல்வரும் ஒன்றே ; இன்பமும் ஒன்றே ; துன்பமும் ஒன்றே; என்மையும் ஒன்றே : தீமையும் ஒன்றே , இறப்பும் ஒன்றே ; பிறப்பும் ஒன்றே; வாழ்வும் ஒன்றே : தாழ்வும் ஒன்றே ; அவரே, எவ்வூரையும் தம்மூரே போலவும், எவரையும் கம்கேளிாே போலவும் மதித்து மாண்புறுவர். - 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும், நன்றும் பிறர்தர வாரா; - கோதலும், தணிதலும் அவற்ருே.ான்ன; சாதலும் புதுவதன்ருே வாழ்தல் இனிது, என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னது, என்றலும் இலமே! மின்னெடு