பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணியன் பூங்குன்றன் 107 அவ்வாறு செய்தால், அத்தவத்தாலாம் பயன் பெறுதல் இலராவர்; ஆதலின், உடலில், உயிர் சிற்றற்காம் அளவு உரன் கிற்கவே தவமாற்றுவர்; அரசர்கள், தம் காட்டு மக் களின் வளமெலாம் குன்றுமாறு பெருவரி வாங்க எண் ளுர்; அவ்வாறு வாங்கினல், அக்குடிகள் அழிவாகலின், இவரினின்றும் வரிவாங்கி வாழ்தல் இயலாது ஆதலின், அவர் மேலும் வாழ்ந்து வரிதருமாறு அளவே கொள்வர். இவ்வுண்மைகளே உணர்ந்தவராய் நம் தலைவர், பொருள் ஈட்டுவது இன்ப நகர்ச்சியின் பொருட்டு; இன்பது கர்ச் சிக்கு இன்றியமையாதது நம் உயிர்; நம் உயிர் அழியின், ஈட்டும் பொருளால் பயன்பெறுதல் இயலாது; நாம், அவர் நம்மைவிட்டுப் பிரியாது உடனுறைவதாலேயே உயிர் வாழ் கின்ருேம்; அவர் பிரிந்தால் நம் உயிர் கிற்காது என்ற உண்மைகளை மட்டும் உணராது பிரிந்து சென்றது எனே? இதுவே ஆட்வர் இயல்பு என்றும் கூறுகின்றனர் அறி ஞர்கள்; என்னே இவ்வுலகத்தின் இயல்பு!” என்று கூறி வருந்தினுள். . இவ்வாறு வருந்தியகோடமையாது, “மருந்துகொள் வோர், பின்னும் பெறல்வேண்டி அம்மாத்தைப் பாது காப்பர்; ஆளுல் நம் தலைவர் என் கலனேயெலாம் உண்டு, யான் இறந்து போமாறு என்னேக் கைவிட்டுப் பிரிந்து சென்றுளார்; இவர் கொடுமையினே என்னென் பேன் மாந்தர் தம் உடல் உான் முழுதும் கெடுமாறு தவம் செய்யார்; ஆனல் யானே, என் உள்ளம் வருந்தி ஒழியுமாறு, என் உள்ளத்தினும், அவரின்பமே பெரி தென எண்ணி அதல்ை இறக்கலானேன்; என்னே என் அறியாமை : குடிஒம்பிக் கொள்ளாக் கெர்டுங்கோலன் போல், அவன் என் உயிரையும் கொண்டுசென்று விட்டான்; யான், அக்கொடுங்கோல் மன்னனுல் அலைப் புண்ட அவன்குடிகளேபோல், அவன் அன்பைப் பெற வின்றிப் பெரிதும் உழந்து வாழ்கின்றேன் என்னே இங்கிலே!” எனத் தலைவன் கொடுமைகளையும், அவன் கொடுமைசெய்யவும், அவனை எண்ணி வருந்தும் தன்