பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்பும் பட்டினத்து........கப்பூதனர் 21 அரசர்க்கு மெய்காப்பாளாய்த் தலைப்பாகையும், சட்டையும் கொண்டு, உயர்ந்துசெல் நடையினராய், சீரிய ஒழுக்கத்தினராய்ப் பெருவீரர்கள் அமர்த்திருத்தலையும், அாசன் பள்ளியறையினுள், ஆங்கு நடைபெறும் அரசியல் உண்மைகளை வெளியில் உரைப்ாதிருத்தற் பொருட்டு, ஊமையராய வெளிநாட்டு மக்களையே குற்றேவல் புரிவோ ராகக் கொண்டிருப்பதையும் கூறியுள்ளார் : " . "துகில்முடித்துப் போர்த்த, தாங்கல் ஒங்குடைப் பெருமூதாளர் ஏமம் குழ. (முல்லைப்: நிங்-ச) ஈாறைப் பள்ளியுள் - - உடம்பின் உாைக்கும், உரையா நாவின் - படம்புகு மிலேச்சர் உழையாக." (முல்லப்: சுச-சு) இவ்வாறு, அரசன்முதல், ஆயர்வரையுள்ள மக்கள், பண்டைக்காலத்தில் மேற்கொண்டிருந்த வாழ்க்கை முறை களே எல்லாம், புலவர் கப்பூதனர் கன்கு எடுத்துக்காட்டி யுள்ளார். இவ்வாறு அவர் பாடிய முல்லைப்பாட்டு, பத்துப் பாட்டினுள் உள்ள எல்லாப் பாட்டினும் அடியளவால் மிகச்சிறிது, ஏன், அளவாற் சிறியதாயிலும், பொருட்சிறப் பால், அவற்ருேடு ஒப்ப விளங்கும் உயர்புகழ்பெற்று விளங்குகிறது.