பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர் 25 யாவது, அவர்களுக்குரிய ஊர், மலை இவற்றையாவது குறித்தாரல்லர். தாம் பாடிய புறத்துறை தழுவிய பாட்டி அம், உரைசால் நெடுந்தகை ' எனப் பெயர் அறிய மாட்டாச் சிற்றுார்த் தலைவன் ஒருவனேயே குறிப்பிட் டுள்ளார். . சிற்றார் ஒன்றின் உரிமைகொண்ட பெருவீரன் ஒருவன் இருந்தான் : அச் சிற்றாரை அடுத்துள்ள பேரரசர்கள் பலரும், தம் பகையரசர்களால் உண்டாம் துயர்போக்கித் துணை புரிதற்கு அவனேயே எதிர்நோக்கி கிற்பர் ; அவர்கள் அவ்வாறு எதிர்நோக்கி வந்து காத்துக் கிடப்பினும், அவர்க்குண்டாய துயரை எளிதில் போக்க வல்ல போாற்றல் தின்பால் இருப்பதால், அவர்கள் துயரைப் பெரிதாக எண்ணுது, தன் விடுநோக்கி வந்து இாந்து சிற்பார்க்கு, அவர் வறுமை நீங்கும்வண்ணம் வாரி வழங்குவதையே கருத்தாக மேற்கொண்டொழுகுவன் ; அத்தகையான் காக்கும் அவ்ஆரும், பாம்புகள் குடிவாழும் புற்றேபோல், பகைவர்களை நிலைகலங்கச்செய்யும் பெருவீரர் பலரை உள்ளடக்கியுளது என அப் பெருவீானேயும், அவ் வீரன் பிறந்த ஊரினையும் பாராட்டியுள்ளார்: ' அாவுறை புற்றத் தற்றே ; நாளும். புரவலர் புன்கண் நோக்காது, இர்வலர்க்கு அருகாது ஈயும் வண்மை - உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே.’ (புறம் : கூஉக.) மதுரையாம் மருதகிலத்து ஊரினராய புலவர் இளவேட்டனர், ஐந்திணை வளங்களையும் நன்கு அறிந்து பாடியுள்ளார்.; அவர் பாடிய அகத்துறைப் பாடல்கள் பத்தில், ஐந்து குறிஞ்சித்திணைப் பொருளும், இரண்டு முல்லைத்தினைப் பொருளும் எஞ்சிய பாக்கள் மூன்றினுள், ஒவ்வொன்று, எஞ்சிய திணைகளுள் ஒவ்வொரு திணைப் பொருளும் உணர கிற்கின்றன. பெருமழை பெய்யத் தளிர்த்த முல்லைக்கொடியில் மலர்ந்த மலரின் மணம் மணக்கும் பெருவழியில், அம் மலரின்டத் தங்கிய வண்டுகள் தேனுண்டு திரியும் என