பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. தங்கால் பொற்கொல்லன் வெண்ணுகனுர் ஊரும், தொழிலும், இயற்பெயரும் உணர நின்ற புலவர்களுள் இவரும் ஒருவராவர்; பாண்டிநாட்டில் நீ வில்லிபுத்துருக்கு அருகில் உள்ள கிருத்தண் கால் என வழங்கப்பெறும் வைணவத் கலமே, பொற்கொல்லன் வெண்ணுகனர் பிறந்த தங்கால் ஆகும். இதனேயே, " தடம்புன ற் கழனித்தங்கால் ” என இளங்கோவடிகள் பாராட்டினர் என்று கூறுவர். இவ்வூரைக் கல்வெட்டுக் கள், இராச இராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால்” என அழைப்பதோடு, இவ்வூர் மடமொன்றில், மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1 காலத்தில், பாரதமும், இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் கூறுகின்றன. (A. R. No. 564, 545 of 1922) இவர் பொன்வணிகர் அல்லர்; பொன்னல் தொழில்செய்து பிழைப்பவராதலின் இவர் பொற்கொல்லர் என அழைக்கப்பெற்ருர். இவர் பெயர் தங்கால்பூட் கொல்லனர் எனச் சில ஏடுகளில் காணப் படுகிறது; பூட்கொல்லன் என்பது பொருள் சிறவாமை யுணர்ந்து அதைப் பூட்கொற்றன் என்றும், முடக்கொற்றன் எனத் திருக்கிய ஏடுகளும் உள. அதைப் பூண்கொல்லன் என்று ஆக்கி, அணிகலன் செய்யும் கொல்லன் என்பாரும் உளர். தங்கால், புலவர் பலரைக்கொண்ட பெருமை யுடையது ; ஆத்திரேயன் செங்கண்ணனர் என்ற புலவரும் இவ் ஆரினராவர். இவர் பாடிய பாக்கள், அகம், புறம், நற்றிணை, குறுக்தொகை ஆகிய நான்கு நூலிலும் இடம் பெற்றுள்ளன. - . மறக்குடி வந்த ஆடவர்க்கே பன்றி, அக் குடியில் வந்த பெண்டிர்க்கும் மறம் உண்டு என்பதை உணர்த்தப் பாடிய பாட்டில், மறக்குடி மனேக்கிழத்தி யொருத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவுசெல்லாமல், ஊர் அருகேயுள்ள மடுக்கரையில் பிடித்துக்கொணர்ந்த உடும் பின் தசையினைத் தயிரோடு சேர்த்துச் சமைத்த உணவை,