பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. மதுரைக் கொல்லன் புல்லன் புல்லன் என்ற பெயருடைய புலவர் சிலர் வாழ்க் திருக்கக் காண்கிருேம்; கருவூர்க் கண்ணன் புல்லன்; கள் ளிக்குடி பூதம்புல்லன். புல்லன் என்ற பெயர்க் காரணம் யாது என்பது புலகைவில்லை. புலவன் என்ற பெயருடை. யார் சிலரும் உள்ளனர்: உழுந்தினைப் புலவன்! கொற்றன் புலவன்! காஞ்சிப் புலவன். புலவன் என்ற பெயரே புல்லன் எனத்திரிந்து வழங்குகிறது போலும் என்றும் சிலர் எண்னுகின்றனர். மதுரையில் வாழ்ந்த கொல்லர் களுள் பெரும்பாலோர், புலமையுற்று வாழ்ந்தனர் என் புது, மதுரைக் கொல்லன் வெண்ணுகளுர், மதுரைப் பெருங் கொல்லன் என்ற புலவர்கள் வாழ்வதால் அறியலாம். இவர், குறிஞ்சி கிலத்தின் இயல்பினையும், அங்கிலத்து வாழ் மகளிரின் மாருத அன்புடைமையினையும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். பலாமரம் ஒன்று சிறையப் பழுத்து கிற்கிறது; அப்பழத்தின் மணமும், அதன் மலரின் மணமும், ஆங்கே கூடி வாழும், கருங்குரங்குகளுக்கு விருந் திட்டு அழைப்பதுபோல் தோன்றின; அக்குரங்குகளில், நீண்ட மயிரையும் கூட்ரிய பற்களையுமுடைய ஒர் ஆண் குரங்கு, அப்பலாமீது எறி, பழங்களே அறுத்து உடைக் கத் தொடங்கிற்று; உடைந்த பழத்தின் மணம், காந்தட் பூவின் மனத்தால் கவினுற்ற, குறவர் சிறுகுடியில் சென்று மணக்கும் என்று அங்கிலத்தின் வளத்தினை வரைந்து காட்டிய புலவர், அச்சிறுகுடியில் வந்தபெண் ஒருத்தி, தான், ஒரு ஆண்மகனேடு அன்புகொண்டிருப்பதைப் பொருத அவ்வூரில் வாழும் சிலர், பழிச்சொல் கூறுவதை அறிந்து, அவ்வாறு அலர் கூறுவதே தொழிலாகக் கொண்ட அவர்களின் பழிச்சொல் கேட்டு யான் அஞ் சேன்; அவர்கள் கூறும் பழியுரைகளால், பான் அவன் மாட்டுக் கொண்டிருக்கும் அன்பு குறைந்து விடாது; உலகமே தலைகீழாக மாறிலும், நீர், தன்னுடைய குளிர்