பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வணிகரிற் புலவர்கள் மாறி, வெம்மைக் குணம் பெறினும், தீ. வெப்பம் ஒழிந்து குளிரத் தொடங்கினும், அடியும் எல்லையும் காணுதற்கில் லாக் கடல்நீரெல்லாம் வற்றி சிலம்தோன்றித் தெரியிலும், கான் அவனிடத்தில் கொண்டுள்ள அன்புறவு கெடாது என்ருல், இப்பெண்கள், அலர் கூறுவதே தொழிலாகக் கொண்ட பழிகிறைந்த இப் பெண்கள் கூறும் சொற்களால் அழிந்துவிடாது; அவர்கள் பழிகூறுவது கண்டு அஞ் சேன்' என்று கூறினுள் என அந்நாட்டு மகளிரின் மாண் பினையும் உணர்த்தியுள்ளார். 'நிலம்புடை பெயரினும், நீர், தீ பிறழிலும், இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும், வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக் கேடுஎவன் உடைத்தோ? தோழி! நீடுமயிர்க் கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை - புடைத் தாடுபுடைய பூங்ாறு பலவுக்கனி காக்களம் சிறுகுடிக் கமழும் இங்குமலே நாடனெடு அமைந்தகம் தொடர்பே' - - (குறுங்: எங்)