பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. மதுரைப் பெருங்கொல்லன் மதுரையில் இரும்புத்தொழில் மேற்கொண்டு வாழ்க் தவர்களுள், இவர் மிகப்பெரிய தொழிற்சாலையினே வைத் திருந்தவராதலின், மதுரைப் பெருங்கொல்லன் என்று அழைக்கப் பெற்ருர் மதுரையில் வாழ்ந்த பிறகொல்லர், மதுரைக் கொல்லன் வெண்ணுகளுர் எனவும், மதுரைக் கொல்லன் புல்லன் எனவும் பெயரிட்டு அழைக்கப் பெற. வும், இவர், பெயரிடப் பெருமையோடு, பெருமைக்குரிய அடைகொடுக்கப் பெற்றும் அழைக்கப் பெறுவது, இவர் பெருமையினேக் குறிக்கும். யானையால் தாக்குண்டு வருந்திய புலி, செந்நாயின் வருகையினே எதிர்பார்த்து கிற்கும், கொடிய காட்டு வழியில் வரும் தலைமகனை, இனி அவ்வாறு வாாற்க எனவும், விளைந்து முற்றிய கினைக்கதிரை உண்னும் கதிர் களை ஒட்டிக் காப்பீராக என்று தாய் கூறியுள்ளாள் என வும் தலைமகனிடத்தில் கூறினுல், நினக்கு வரும் குறை யாதோ? என்று தோழியிடம் கூறுவாள் போல், தலைமகன் கேட்கக்கூறி, இனி இரவில் வாாற்க: பகலில் காங்கள். காக்கும் திணைப்புனத்திற்கு வருக என்று கூறிய தலைமகள் கூற்று அடங்கிய, குறிஞ்சித்திணை தழுவிய ஒருபாட்டே, இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துளது. வளைவாய்ச் சிறுகிளி விளை தினை கடீஇயர் செல்கென் ருேளே அன்னை எனt குறுங்கை இரும்புலிக் கொலேவல் எற்றை பைங்கண் செக்காய் படுபதம் பார்க்கும் ஆரிருள் கடுநாள் வருதி . . . சால் நாட வாாலோ எனவே: (குறுக் கசக)

          • ...*•