பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. கச்சிப்பேட்டு இளந்தச்சனுர் தொண்டை காட்டில், சிறப்புற்ருேங்கிய காஞ்சிமா நகரை அடுத்துக் கச்சிப்பேடு என்ருேர் ஊர் உண்டு; ஆங் குத் தச்சுத் தொழில் மேற்கொண்டோர் பலர் வாழ்ந்திருத் தினர் ; அவர்களுள் ஆண்டால் இளையராய இவர், அறி வான் பெரியாாய்ப் புலமையுற்று விளங்கினராகலின் கச்சிப்பேட்டு இளந்தச்சனர் என்று அழைக்கப் பெற்ருர்; இனி, இளம் பொன் வணிகளுள் என்புழி, இளமை, அவர் ஆண்டின் இளமையைக் குறிக்க வாாது, அவர் தொ லின் இயல்பு குறிக்க வந்ததே போல், ஈண்டும், தச்சுத் தொழில் இளந்தச்சு, பெருக்தச்சு என இரண்டாக, அவற். அறுள் இவர், இளந்தச்சு மேற்கொண்டிருந்தமையால், இளங் தச்சனுர் எனப்பட்டார் என, இளமை, அவர் தொழிலின் இயல்புணர வந்ததே எனக் கூறுவாகுமுளர். தொண்டைகாடு சான் ருே ரு டைத் து என்ப.: தொண்டை நாட்டினராய இவர் பாட்டில் அச்சான்ருண் மைக்குணம் பொருந்த வந்துளது. பொருள் கருதிப் பிரிந்து செல்லும் தலைவன், பிரியுங்கால், தன் மனைவி.பால் தன் பிரிவாலாய துயர் சிறிது காணினும், அவன் சென்ற வினையை இனிது முடித்தலாகா மனக்கலக்கமுறுவன் ; அதனல், அவன் வினையேயன்றி அவன் இற்பெருங் கிழத்தியின் இல்லறவாழ்வும் இனிது நடைபெருது ; ஆதலின், அவன் பிரிந்து செல்லுங்கால், ஒரு சிறிதும் வருத்தம் இல்லாள் போலவும், மாருக அவன் பிரிதலைத் தானும் வரவேற்பாள் போலவும், அவள் அவனறியக் காட் டின், அவன், அவள் துயர்கண்டு கலங்கும் மனக்கலக்க மின்றித் தெளிந்த அறிவினனுய்ச் சென்ற வினையைச் செவ்விதின் முடித்து மீள்வன்; ஆதலின், இல்லிருந்து நல்லறமாற்றும் தற்குடி மகளிரின், அவ்வில்லறத்திற்குப் பொருள் இன்றியமையாதது என்று உணர்ந்து, அப் பொருள் கருதிப் பிரியும் தலைவனுக்குப் போக விடை சத்து, அவனைப் பிரித்து வாழ்வதால் உண்டாம் துயர்