பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிப்பேட்டு இளந்தச்சனுர் 59 பொறுத்த வாழ்வதே தங்கள் கடமையாம் என்று கொள்வர். - - இவ்வுயரிய இல்லறப் பண்புணர்ந்தாளாய ஒரு பெண், பொருள் கருதிப் பிரிந்து செல்லும் கலைமகன் முன்கின்று, இவ்வகன்ற பெரிய ஊர் நடுவே அமைந்துள்ள நம் வீட்டிலேயே இருக்கின்ருேம்; அதுவே எங்கள் விருப்பத்: திற்கு ஏற்றதாகவுளது என்று கூறியதோடு அமையா ளாய்த்தலைவர் பிரிந்தாராயின், அவர் பிரிவு இல்லறத்திற்குச் துணைபுரியும் என்ற எண்ணமுடையாய் ஆற்றியிருப்ப தற்கு மாருக, அழுது வாடுவது பெருங்குடி மகளிர்க்குப் பெருமைதரும் செயலாகாது என்றும் எடுத்துக்கூறி, அறனறிந்து மூத்த அறிவுடைமை தோன்ற கின்ருள். பண்பட்ட பெருங்குணமுடையளாய இப்பெண்ணின் வரலாற்றினேப் பாடி, பழந்தமிழ் மகளிரின் ஒழுக்கத்தை' உணர்த்திய புலவர் கச்சிப்பேட்டு இளந்தச்சனுர், இக்கால மகளிர்க்கும் வழி காட்டியுள்ளார் : 'கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த குறுங்கால் குரவின் குவியினர் வான்பூ ஆடுடை இடைமகன் குடப் பூக்கும் அகலுள் ஆங்கண் சிறுாேமே ; - அதுவே சாலுவ காமம்; அன்றியும், எம்விட்டு அகறிர் ஆயின், கொன்னென்று கூறுவல் வாழியர் ; ஐய! வேறுபட்டு இரீஇயகாலே இரியின், - - பெரிய அல்லவோ பெரியவர் கிலேயே. (நற்:அ.சு.க.)