பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனுர் கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனுர், தொண்டை நாட் த்ெ தலைநகராம் காஞ்சியை அடுத்துள்ள கச்சிப்பேடு என்ற ஊரினர் , தச்சுத் தொழிலைத் தம் பிழைப்பிற்குரிய தொழிலாக மேற்கொண்டு வாழ்ந்தவர் ; முற்கூறிய இளந்தச்சனரின் முன் பிறந்தவர் ; வழிவழித் தமிழ் வளர்த்த குடியில் வந்தவர் ; இவ்வளவே இவர் வரலாருக காம் அறியத்தக்கது. இவர் உணர்த்தும் குறிஞ்சிகில ஒழுக்கம் சுவைபயந்து கிற்கிறது. - தலைவியை, அவள் தோழியும் அறிய கிலேயில், இயற்கை வயத்தால் எதிர்ப்பட்டு, அவள் உறவு பெற்று மகிழ்ந்த தலைமகன், மறுநாளும் அவளேக் காணவத்து, அன்று அவள் தன் உயிர்த்தோழியோடு உடனிருப்பது கண்டு, இனி, இத்தோழியின் துண்பெற்ருலன்றி இவளைப் பெறுதல் இயலாதென உணர்ந்து, தலைவியைப் பண்டே பார்த்துப் பழகியவன் தான் என்பதை, அத்தோழிக்குக் குறிப்பால் உணர்த்தி, அவள் எண்ணமும், அத்தலைவியின் எண்ணமும், தன் எண்ணமும் ஒன்று படுதலே விரும்பும் செயலைச் செய்யுளாகப் பாடிக் காட்டியுள்ளார். தலைவியும், தோழியும் கங்கள் திணைப்புனத்துப் பாண் மேல் கின்றிருந்தாராக, அவர் அணித்தே வந்து கின்ற தலைமகன், அவர்களை நோக்கி, “அதோ, அருவிகள் ஒலிக்கின்ற பெரிய மலைஅடிவாரத்தே, அமைந்து, அப் பெருமலைகளையே அரணுகக்கொண்டு, இளங்கன்றுகள் காட்டினுள் ஒடிவிடாவண்ணம், அவற்றின் கால்களில் ஆட்டப்பெற்ற கயிறுகள் கட்டப் பெற்றனவும், தம் வேரில் பழுத்த பழங்களேத்தின்று, அருகே மூங்கில் வளர்ந்து செழித்திருக்கும் மலையில் உள்ள் சுனையின் தெளிந்த நீர் குடித்த, அக்கன்றுகளின் தாய்ப்பசுக்கள், இனிது தங்கித் தயில் கொள்ளுமாறு தழைத்து கிம்பனவுமாய பலாமாங் களேத் தம் வீடுகளின் முன்னே வளர்த்திருக்கும் அச்சிறு.