பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. விற்றுாற்று வண்ணக்கன் தத்தனும் தத்தனர் என்ற இயற்பெயர் கொண்ட இப் புலவர் பிறந்த ஊர் எங்குளது என்பதை அறின்துகொள்வதற் கில்லை; இவர் வடர்ட்டினரல்லர்; தமிழ் நாட்டவரே என் பது உறுதி. இவர் தன்னுடைய பாட்டில், பாண்டியர் தலைநகர் மதுரையைக் குறித்துள்ளாராதலின், மதுரை. யைக் கண்டு அறிந்தவர் என்பது புலனும், . தலைவன் ஒருவன், இல்லறம் இனிது இயங்குதற்கு இன்றியமையாப் பெருமையுடையது பொருள் எனத் தெரிந்து, அப்பொருள் தேடவேண்டி, கடத்தற்கரிய வழி பல கடந்து சென்றுகொண்டிருக்கிருன் இடைவழியில், தலைவியைப் பற்றிய எண்ணம் அவன் உள்ளத்தே எழுத்து மேற்செல்லவொட்டாமல் தடைசெய்து விட்டது; அவனே, தொடங்கிய எவ்வினையையும் இடையே தளர்ந்து கைவிடும் இயல்புடையவனல்லன்; ஆகலின், தன் தலைவியை கினேக் துருகும் தன் நெஞ்சை நோக்கி, நெஞ்சே! அரிய சுரம் கடந்து சென்று ஈட்டும் பொருளின் சிறப்பை ஒருபால் கினைத்தும், கரும்பு எழுதப்பெற்றுக் கவினுறவிளங்கும் தலைவியைப் பிரிந்து செல்லும் வருத்தத்தை ஒருபால் கினேந்தும் போவதா? அல்லது மீள்வதா? என்பதறியாது. தயங்குகின்றன; ஆனுல் ஒன்று கூறுகின்றேன், பிரியுங் கால், கின் கலைமகள் தோழி, பொருளின் சிறப்பையும், செல்லும் வழியின் அருமையினேயும், பிரிந்தால் தலைவிக் குண்டாம் துயரினையும் எடுத்துக்காட்டி, இறுதியில் சென்று பொருள்பெற்று வருவதே ஆடவர்க்கு அழகு என்க் காரணம் பல காட்டிக் கூறிய அரிய உண்மையினைக் கேட்டுப் பிரிந்து வந்த ,ே இத்துணைத் தொலைவு வந்த பின்னர்த் தலைவியை கினேந்து வருந்துவது தகுமோ ?” என்று கூறியதாகப் பாடி, அக்காலத் தமிழ்க்குடி வந்த ஒர் ஆண்மகன், காதல், கடமை இவற்றுள் எது உயர்ந்தது. என்பதை அறியமாட்டாமல் இரண்டையும் ஒன்ருகவே எண்ணி மதித்து, இரண்டிலும் பிறழாப் பெருவாழ்வு