பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் காருலவியங் கூத்தனர் 91. நீண்டு வரிசையாகச் செல்லும் கறையான்கள் ஒன்றுகூடிக் கட்டிய பாம்புகள் வாழ்தற்கேற்றதாய புற்றில் உள்ள, அக்கறையான்கள் முழுதும் ஒருசேர ஒழிந்து போகுமாறு, கூரிய பெரிய நகங்களினல் விரைந்து பறித்து, உள்ளிருப் பன அனைத்தினையும் உறிஞ்சி இழுக்கும் ” என அங் கிலத்தின் பண்பினை விளங்கப் பாடியுள்ளார் : கவிதலே எண்கின் பரூஉமயிர் எற்றை இரைதேர் வேட்கையின் இரவிற் போகி நீடுசெயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அாவாழ் புற்றம் ஒழிய, ஒய்யென மு. வாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும்.” (நற் : கூஉடு).