பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ ள் ள ல் க ள்

தோற்றுவாய்

'பொப்பண்ண காங்கெயர் கோன் அளித்த

சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்று உரைசொல்வித்ததே." . (சிலப், அடி, வரலாறு)

என்று கூறுகிறார் புலவர் ஒருவர்: ஒல்காப் புகழ்கொண்ட தொல்காப்பியம் உடையது எங்கள் தமிழ்; எட்டுத்தொகை உடைமையால் ஈடிலாப் புகழ்கொண்டது எங்கள் தமிழ் ; பத்துப் பாட்டால் பாரோர் புகழ் கொண்டது எங்கள் பைந்தமிழ்; வள்ளுவன் வழங்கிய வான்குறள் உடையது எங்கள் தமிழ்; நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி யாரங்கொண்டது எங்கள் தமிழ்; முச்சங்கம் கண்டது எங் கள் தமிழ்; இயல் உடையது; இசையுடையது; இனிய கூத் துடையது எங்கள் தமிழ் என்றெல்லாம் இன்று பெருமை பாராட்டுகிறோம் நாம். -

அப் பெருமையை இன்று நாம் அடைய, அன்று அவற்றை ஆக்கி அளித்தார்கள் புலவர் பெருமக்கள் பல் லோர்; அப் புலவர்கள் ஆன்றவிந்தடங்கிய அறிவுடைய ராய், அருந்தமிழ்ப் பாக்களை ஆக்கி அளித்த அப்பணியினை, அன்று மேற்கொண்டமையினாலேயே, இன்று நாம் பெருமை கொள்கிறோம்; அவர்கள் அருந்தமிழ்ப் பாக்களை ஆக்கி அளிக்கும் அப்பணியைக் கைவிட்டு, எல்லோரையும் போன்று, தம் வயிற்று வாழ்விற்காவனவே தேடி அலையும் அப்பணியை மேற்கொண்டிருப்பரேல் அன்று அருந் தமிழ்ப் பாக்கள் தோன்றியிரா, இன்று நாமும் பெருமை கொண்டிருத்தல் இயலாது; அப் புலவர் பெருமக்கள் தம் வாழ்விற்காம் வகைதேடி உழலாது அமிழ்தினும் இனிய