பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 வள்ளல்கள்

அருந்தமிழ்ப் பாக்களைப் பாடிக் கிடக்கும் பணியினராக அன்று வழிசெய்து தந்தவர், அன்று நாடாண்ட அரசர் களும் அவ்வரசர்களே போலும் சீருடைச் செல்வர் சில ருமே யாவர். அவர்கள், அப்புலவர்கள் வேண்டும்போ தெல்லாம், வேண்டிய பொருளை விரும்பி அளித்து வந்தனர்; அரசரும், பிறரும் பொருள் அளித்துப் பேணிப் புரந்தமையால், புலவர்கள் பொருள் தேடியலையும் பணியற் றவராயினர்; வாழ்வு பற்றிய கவலை அவர்க்கு இலதாயிற்று; அதனால் அவர்கள் உள்ளத்தே அமைதி நிலவிற்று; அவ் வமைதி நிறைந்த உள்ளத்தோடு உலகத்தை ஊன்றி ஊன்றி நோக்கினார்கள்; உலகம் அவர் உள்ளத்தே உருப் பெற்றது; ஆண்டு உருப்பெற்ற உலகம், அவர் உரையில் இடம் பெற்றது; உயிரோவியமாக வெளிப் போந்தது; உல கியல் உணர்த்தும் பாக்கள் பலப்பல உண்டாயின.

ஆகவே, அரிய பாக்களைப் பாடி அன்று மொழி வளர்த்தவர், அவ் அருந்தமிழ்ப் புலவர்களே எனினும், உண்மையில் தமிழ் வளர்த்தோர், அப் புலவர்களுக்குப் பொருள் அளித்துப் பேணிய புரவலர்களே ஆவர். ஆகவே இன்று அம்மொழிகொண்டு பெருமைகொள்ளும் நாம் அனைவரும், அன்று வரையாது வழங்கித், தமிழ் வளரத் துணைபுரிந்த அவ்வள்ளியோர்க்கு நன்றி செலுத்தக் கட மைப் பட்டவராவோம்.

பண்டு பைந்தமிழ் நாடாண்ட பேரரசர் சிற்றரசர் ஆய அனைவரும் அவ்வாறு வழங்கி வாழ்வுபெற்றவரே எனினும், வள்ளல்கள் என, அக்காலப் புலவர்களாலேயே வாழ்த்தப் பெற்றவர், அதியமான் நெடுமானஞ்சி, ஆய் அண்டிரன், வல்வில் ஒரி, மலையமான் திருமுடிக்காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி, பறம்பிற்கோமான் பாரி, வையா விக் கோப்பெரும் பேகன் எனும் எழுவருமே யாவர்:

"வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் 
 கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 
 அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 
 பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண