பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சங்கர ராசேந்திர சோழன் உலா 343. முன்னும் கடம்அனந்தம் தோற்று முதுகிட்டும் பின்னும் கடம்அனந்தம் பிந்தாமே-தன்னில் 344. வனந்துபா ரித்துவிடு மண்அடையக் கொல்ல முனிந்துபார்த் தன்ன முலையாள்-அனந்தன் 345. பணம்ஆயிரத்தின் ஒருபூப் பரிக்கும் குணமா யதுவெருளி கொள்ளக்-கணமுனிவர் 346. ஓங்கும் நயனமனப் பூவின் ஒருகோடி தாங்கும் நிதம்பத் தடம்பணத்தாள்-தீங்கிளவி 343–4, நகிலின் வருணன. பேரிளம் பெண்ணின் நகில் தாழ்ந்து கீழ்நோக்கியிருக்கும். இதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கிரு.ர். முன்பும் பல குடங்கள் இவள் நகிலுக்குத் தோற்றுப் புறங்காட் டிலுைம், அதனால் சோர்வடையாமல் பின்னும் அளவற்ற குடங்களைத் தோல்வியுருமல் தன்னிடத்தினின்றும் உருவாக்கிப் பரப்பிவிடும் பூமி முழுவதையும் அழிப்பதற்காகக் கோபித்துப் பார்த்தாற் போலக் கீழ் நோக்கியிருக்கும் நகிலை உடையவள். -- i. கடம் - குடம் பிந்தாமே-தோற்றுப் பின்னடையாமல், தன்னில்தன்னிடத்தினின்றும். வனந்து - உருவாக்கி. பாரித்து - பரப்பி. அடைய - முழுதும். அனந்தன் -ஆதிசேடன். - 344-6. ஆதிசேடனுடைய படங்கள் ஆயிரத்தால் ஒரு பூவை (பூமியை)த் தாங்கும் இயல்பானது அஞ்சி ஒதுங்கும்படியாக, கூட்ட மாகிய முனிவர் உயர்ந்த கண்களாகிய பூவிலும் உள்ளமாகிய பூவிலும் ஒரு கோடியைத் தாங்குகின்ற இரகசிய உறுப்பாகிய படத்தை உடை யவள். ஆயிரம் படங்களால் ஒரு பூவைத் தாங்குவதைவிட ஒரு படத்தால் ஒரு கோடி பூக்களைத் தாங்குவது சிறந்தது என்றபடி. ஒரு பூ பரிக்கும்.ஒரு பூமியைத் தாங்கும். குணமாயது: எழுவாய். வெருளி கொள்ள-அச்சம் கொள்ள. கண முனிவர் - முனிவர்கணத்தார். நயனப்பூ, மனப்பூ நிதம்பந் தாங்குமென்றது, முனிவரின் கண்களும் உள்ளங்களும் அதை நாடி மொய்த்ததைச் சுட்டியபடி. நிதம்பத்தை அரவின் படமாக உருவகித்தார். . s: +. - -