பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 67 பேரிளம் பெண் 338. தங்கொருத்தி பேரிளம்பெண் அம்போ குதத்தெர இங்கொருத்தி மேனிக் ೧æägar–ುಸಿ 339. சோளேந் திரனைத் தொழாத வழுதிகுல வாள்ஏந்தி நிற்கைக்கு மாருயும்-சோளேசன் 340. ஆகத்தாள் தோளாள் அழகுப் பெயர்சுமந்த வேகத்தா ளாயும் வெறுத்தென்னப்-பாகத்து 341. மேவும் பிறையும் விழுக்கமலைக் கோலமும் பூவும் துறந்த புரிகுழலாள்-காவலன் 3.42. ஏர்அஞ் சனம்புனைவ தெங்கட் கமையும்எனக் கார்அஞ் சனம்புனேயாக் 'கண்மலராள்-தீரநைந்து 338. மேனி அழகுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவள் தாமரை யில் உள்ள திருமகளாகிய ஒருத்தி, இங்கேயுள்ள பேரிளம் பெண்ணுகிய ஒருத்தி என்று சொல்வதற்கு ஏற்றவள். 339-41. பேரிளம் பெண் தன் கூந்தலில் பிறை, சீதேவி என் னும் தலைக்கோலங்களையும் மலரையும் அணியாமல் துறந்திருக்கிருள், அதற்குக் கற்பனையாகக் காரணம் கூறுகிருர், வழுதிகுல வாள் - பாண்டிய குலத்தின் மூல ஒளி, என்றது சந்திரன. அதனைத் தலையில் ஏந்தி நிற்பதற்கு மாறுபாடுள்ளவளாகிப் பிறையைத் துறந்தாள். ஆகத்தாள் - மார்பிலுள்ள திருமகள்; அவள் பெயர் சுமந்தது. சீதேவி என்னும் தலைக்கோலம். தோள்ாள் - சோழனுடைய தோளில் உள்ள் நிலம்கள். அவள் பெயராகிய பூ என்பதைச் சுமந்தது மலர். சுமந்த வேகத்தாளாயும்பசுமப்பதனால் உண்டான கோபத்தையுடையவ ளாகியும். மாருய்ப் பிறை துறந்தாள்: வேகத்தாளாய்ச் சிதேவி என்னும் தலைக்கோலத்தையும் மலரையும் துறந்தாள். விழுக்கமலைக் கோலம்-மேலான சீதேவி என்னும் தலைக்கோலம். இங்கே சொன்ன மூன்று தலையணிகளையும், "செந்திருவுந் திங்களும் பூவுந் தலைசிறப்ப’’ (தண்டி, மேற்.) என்று பிறரும் கூறுவர். - 341-2. சோழ மன்னனுடைய கருமேனியின் அழகாகிய மையை அணிவது எங்களுக்குப் போதும் என்று கரிய மையைப் புனேயாத கண்மலரை உடையவள். தீர நைந்து முற்றும் மெலிந்து. -