பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சங்கர ராசேந்திர சோழன் உலா 332. வில்மலைவும் மீன்மலைவும் வீட்டிப் புலிமலைந்த பொன்மலைதந் தாலும் பொருட்கொள்ளேன் இன்னமும் 333. நின்கண் கனவெனக்கு நேர்கைக்கு நீகவர்ந்த என்கண் துயிலே இரக்கின்றேன்-வன்கண்மை 334. என்னுடன் செய்தியேல் நீதிக் கிழிவென்று மன்னுடன் செங்கனி வாய்மலர்ந்தாள்-தென்னர் 385. மதில்மடங்க மட்டித்த கோமானும் மானிற் பதின்மடங்கு வேட்கை பணித்தான்-மதுகரத் 336. தாரும் கலனும் அனந்த சனபதமும் - ஊரும் தமனிய ஓங்கலும்-ஆரும் 337. தெரிசங் கரன்பாத சேகரன் வீரம் \ புரிசங் கரன்ஈந்து போந்தான்-வருதெருவத் 332. சேரருடைய ി:ാ பொறித்ததையும், பாண்டியர் களுடைய மீனைப் பொறித்ததையும் அழித்துச் சோழன் தன் புலியிலச் சினையைப் பொறித்த மேருமலை. மலைவு-அணிதல், இங்கே பொறித்தல். 333. நின்கண் கனவு - நின்னிடத்தே இணைந்ததாகக் கண்ட கனவு. நேர்கைக்கு மீண்டும் உண்டாவதற்கு. நீ கவர்ந்த துயில் - நீ அருள் செய்யாமல் என்னிடமிருந்து கவர்ந்த உறக்கம்: காமுற்ருர் உறங்காதிருத்தல் இயல்பு. வன்கண்மை - கொடுமை; என் வேண்டு கோளைப் புறக்கணிக்கும் கொடுமை. - 334. மன்னுடன்-சோழனுடன். தென்னர்-பாண்டியர்களுடைய. 335. மட்டித்த_அழித்த. மானின் தெரிவையைவிட வேட்கை பணித்தான் - காதலை அவள்பால் உடையவனனன். மதுகரம் - வண்டுகள் மொய்க்கும். . . . r ‘. 336. கலனும் ஆபரணங்களும், சனபதம் - நாடு. தமனிய ஓங்கலும்-பொன் குவிந்த மலையும்; மலைபோலக் குவிந்த பொன்னும். 337. சங்கரன் பாத சேகரன்.சிவபெருமானுடைய திருவடிகளைத் தன் தலையில் அணிந்து கொண்டவன். 336- மன்னர்கள் தம் அன்புக்கு உரியவர்களுக்கு மாலை, அணிகலன், நாடு, ஊர், ப்ொன் ஆகியவற்றைப் பரிசர்கத் தருவது ւDDrւվ. - * . . -