பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சங்கர ராசேந்திர சோழன் உலா 364. அடலோன் உருவம் அமையத் திருப்பாற் கடலோ இதென்னக் கவலும்-இடைதடுத்து 365. முத்தனேய மூரல் ஒருத்திஅவன் முன்னேவடி வத்தனையும் நம்மால் அடங்குமோ-இத்தலத்தை 366. எந்தை பிறந்தளிக்கு மாறே எழுதுகெனச் சிந்தை தெளிந்ததொரு செவ்விக்கண்-இந்து 367. குலமன்னர், கேரளக் கோமன்னர் ஏனைப் - பலமன்னர் முன்னர்ப் பணிய-உலகிறைஞ்சப் 368. பேரி முரசம் அதிரப் பெரிதொற்றை மூரி வலம்புரி முன்முழங்கத்-தேரும் 369. கரியும் சிவிகை கவிகை கொடிக்காடும் - பரியும் நிலம்நெளியப் பம்ப-நிருபன் 364. அடலோன் - சோழனுகிய திருமால். கவலும்-கவலை கொள் வாள். இடை தடுத்து-இடையே அவள் கவலுவதைத் தடுத்து. 365. மூரல் - பல்: ஒருத்தி-ஒரு தோழி. முன்னே வடிவு என்றது திருமாலின் அவதார வடிவங்களை. நம்மால் அடங்குமோ - நம்மால் ஒவியத்தில் எழுத அடங்குமோ. இத்தலத்தை - இந்தப் பூமியை. 366. இப்போது பிறந்து காவல் புரியும் வடிவத்தையே. 5TಿಶT - என்று சொல்ல. அது கேட்டுப் பேரிளம்பெண் சிந்தை தெளிந்தாள். இந்து சந்திரன். - - 366-7. இந்து குல மன்னர் - பாண்டியர். 367. கேரளக் கோமன்னர் சேரர். உலகு -உலகிலுள்ள 65567 368. பேரி - பெரிய முரசு. மூரி- வலிமையையுடைய வலம்புரி - சங்கு. பெரிது முழங்க. - - * ... . " 369. கவிகை - குடை பரியும் - குதிர்ைகளும், நெளிய- வளைய. பம்ப - பர்வ. :