பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五路 சங்கர ராசேந்திர சோழன் உலா கூறியதோடு ஒத்து நிற்றலும் அவர் பாடிய உலாக்களிலும் இந்த உலாவிலும் பல கருத்துக்கள் ஒத்திருத்தலும் இதைப் புலப்படுத்தும். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவைக் குறிப்பிடும்போது அதன் தொடக்கத்தையே சுட்டிக் காட்டுகிருர்; கூடிய சீர்தந்த என்றெடுத்த கூத்தன்.உலா' (24); குலோத்துங்கன் மீது அப்புலவர் பெருமான் பாடிய உலாவையும் பிள்ளைத் தமிழையும் குறிப்பிடுகிருர் (25): நூலின் இறுதியில், 'கூத்தன் நிகழ்த்த ஒருமூன், றுலாக் கொண்டான்' (389) என்று மூவருலாவை நினைவு கூர்கிரு.ர். விக்கிரம சோழனுலாவில், தெரிவை பாணனைத் தசாங்கங்களைப் பாடும்படி சொல்லுகிருள். இரண்டு கண்ணிக்குள் அவள் அவற்றைத் தொகுத்துச் சொல்கிருள். நேரியும்,கோழியும் வேங்கையும் முப்பணையும் கோரமும் பாழி அயிரா பதப்பகடும்-ஆழியான் சூடிய ஆரமும் ஆணையும் சோளுடும் காடு திரைத்தெறியும் காவிரியும்-பாடுகென' (272-73) இந்த உலாவில் மடந்தை தசாங்கங்களைப் பாடுகிருள். இங்கும் இரண்டே கண்ணிகளில் அவற்றை அடக்கிச் சொல்கிருர் ஆசிரியர். நேரியும் காவிரியும் காவிரி நீர்நாடும் ஆரியன் கோரமும் ஆரமும்-பேரியம் மூன்றும் கொடுவாயும் மூரிஅயி ராபதமும் ஆன்ற புகாரும்பே ராணேயும்-தேன்துளிக்கப் பாடினுள் (242-4) உலாக்களில் காமுற்ற மகளிர் தலைவன் முன் தம் குறைகளைக் கூறி முறையிடுவதாகவே புலவர்கள் பாடியிருக்கிருர்கள். இந்தக் காதல் ஒருதலைக் காமம் என்றே கொள்ளும்படி அமைந்திருக்கும். ஆனல் ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்களில் தலைவனும் தன்னைக் கண்ட மகளிரைப் போலவே வேட்கை மீதுார்ந்தா னென்றும், அவர்களுக்கு மாலை அளித்தானென்றும், பலவகைப் பரிசுகளை அளித்தானென்றும் பாடுகிருர். ஏனேய உலாக்களில் இப்படி இரு வழியும் அன்பு எழுவதைக் காண முடியாது. இந்த உலா ஆசிரியரும் ஒட்டக்கூத்தரைப் பின் பற்றி இருவரும் அன்பு கொள்வது முதலியவற்றைச் சொல்கிரு.ர். இந்த உலாவில், அரிவையும் சோழனும் ஒருவரை ஒருவர் பார்த்து மனமுருகி நெகிழ்கிருர்கள்.