பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை I I ஒரு நூல் இயற்றுவாரா என்று தோன்றலாம். ஒருகால் குலோத்துங்க சோழன் கோவையைத் தமையன்மேல் பாடிய புலவரே சங்கர சோழனே இந்த உலாவினுல் பாடியிருத்தல் கூடும்.* கோவையிலும் இந்த உலாவிலும் வரும் சில கருத்துக்களின் ஒற்றுமை இந்த எண்ணத்துக்கு இடம் தருகிறது. அஞ்சி ஒடினவர் களை ஒறுக்காமல் விடுபவன் குலோத்துங்கன் என்பதை, "உடைந் தோடினரைக் காயாத சிங்கம் (59), அஞ்சியோடினர்.பின் கூனத விற்கை அபயன் குலோத்துங்கன் (2.98) என்று கோவை கூறுகிறது. இந்த உலா இந்த இயல்பைச் சங்கர சோழனுடைய யானையின் இயல் பாக வைத்து, செருப்போய்ப், பயந்தவரை எல்லாம் பருவருகை தீர்க்கும்' (7.5) என்று சொல்கிறது. பகைமன்னர் திறை அளந்தால் அவர்களைச் சிறை விடுப்பவன் குலோத்துங்கன் என்று கோவை சொல் கிறது: வழுதியர்கோன் திறை தர வன்சிறை விடுத்து. , ...அழுதுயர் மாற்றும் குலோத்துங்க சோழன் (465); இவ்வுலாவும், சிறையில் அகப்பட்ட மன்னர்கள் திறையாகப் பொற்குவையை அளக்க, அந்தக் குவையும் உடனே அவர்களுடைய விலங்கைத் தறிக்க அந்தக் குவையும் நிரம்ப' என்ற பொருள்பட, சிறைப்படு வேந்தர் திறையாய்-நிறைத்த அரும்பொற் குவாலும் அடித்தளே விட்ட கரும்பொற் குவாலும் களுல’’ என்று கூறுகிறது. குலோத்துங்கனுடைய தமிழன்பைச் சொல்லுகை யில், அவனுடைய காதில் கலையும் தமிழும் அணிபோல இருக்கும் என்று கோவையில் காண்கிருேம். மதுரித்த தொன்னூல் காதே மனப்பவன்'" (332), மெய்த்தமிழைக் காதே புனைபவன்' (120) என்பவற்றைக் காண்க. இதே கருத்தை உலா ஆசிரியர் வேறு வகையில் சொல்கிருர். தான் கேட்ட தமிழ் நூல்கள் ஒழுகுவதைப் போலக் காதில் மகரக் குழையைத் தொங்கவிட்டான்' என்கிரு.ர். புரிகாதில், சால வினவுதமிழ்ச் செப்பொழுகும் தன்மையில் கோல மகரக் குழைது.ாக்கி (54-5) .. இவற்றைப் போன்ற பகுதிகள் கோவைக்கும் இந்த உலாவுக்கும் ஆசிரியர் ஒருவரே என்று நினைக்கச் செய்கின்றன. இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாவை நன்கு ஆராய்ந்தவர். இந்த உலாவில் வரும் அரசர்குல முறை அவர் இவ்வாறு திரு. மு. அருணசலமும் கருதுகிருர், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்ருண்டு, 1970. ப. 417.