பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 சங்கர ராசேந்திர சோழன் உலா என்று இவனே மிகச் சிறப்பித்துப் பாடுகிருர் ஆசிரியர். இங்குள்ள பாராட் டெல்லாம் இவனுடைய வீரச் சிறப்பும் வென்றிச் சிறப்புமாகவே உள்ளன, சங்கர சோழன் இவ்வாறு தந்தையையும் தமையன்மார்களையும் சொன்ன பிறகு சங்கரசோழன் புகழைச் சொல்லுகிருர் புலவர்: மெய்த்துணையாய்த், தோற்றிய சங்கர ராசன் சுரராசன் போற்றிய கங்கா புரராசன்;-சீற்றத்து உறைப்படு வேலால் ஒழித்துஒழி யாது சிறைப்படு வேந்தர் திறையாய்-நிறைத்த அரும்பொற் குவாலும் அடித்தளை விட்ட கரும்பொற் குவாலும் களுலப்-பரம்பும் கடைத்தலை மும்முரசம் கண்இரட்ட ஒற்றைக் குடைத்தலை அண்டமெலாம் கோலத்-தொடைத்தேன் பலகளிக்கும் திண்டோட் பருப்பதத்து ஏந்தி உலகுஅளிக்கும் நாளில்’’ இவ்வாறு கூறி மேலே உலாப் போவதற்கு முன் நிகழ்ந்தனவற்றைச் சொல்கிருர். இங்கே உள்ளவற்ருல் சங்கர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தவன் என்றும், பகைவரை வென்றவன் என்றும், ஆட்சிபுரிந்தவன் என்றும் தெரிகிறது. தசாங்கம் சொல்லுமிடத்தில் இவன் நகரம் புகார் என்று கூறுகிருர் ஆசிரியர். காவிரித்தீர்த்தத்தில் ஆடினன் என்று இருப்பதால் அதையே கொள்ள வேண்டும். குலோத் துங்க சோழன் கோவையில் இவன் மூன்ருங்குலோத்துங்கனுடைய தம்பி என்ற செய்தி ஒருபாட்டில் வருகிறதையன்றி வேறு நூல்களாலோ, கல் வெட்டுக்களாலோ இவனைப் பற்றிய செய்திகள் தெரியவில்லை. இவன் சோழ நாட்டை ஆண்டிருந்தால் அக்காலக் கல்வெட்டுக்கள் இருந்திருக் கும்; ஆதலால் இவன் தன்னுடைய தமையனுக்கு உதவியாகச் சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆசிரியர் சங்கர சோழனுடைய பண்பையும் தமிழார்வத்தையும் அறிந்த புலவர் இவனைப் பாட விரும்பி இந்த உலாவை இயற்றியிருக்க வேண்டும். குலோத்துங்கனை இந்த உலாவில் ஒரளவு பாராட்டியவர் அவனைப்பற்றி ஒரு நூல் இயற்ருமல் அவன் தம்பியைப்பற்றித் தனியே