பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 9 உவந்த வளவர் குலஅசலத்து உச்சி நிவந்த பருதி நிகர்ப்ப-அவந்திமன் வங்கமன் கங்கமன் ஆதியவர் வந்தித்த சங்கமன்' என்று பாராட்டுகிருர். இவன் வளவர் குலத்திலே தோன்றினவன் என்றும், அவந்தி யரசன், வங்க அரசன், கங்க அரசன் முதலிய அரசர் களால் போற்றப் பெற்றவன் என்றும் இக்கண்ணிகளால் விளங்குகிறது. இதற்குப்பின் சங்கர சோழனுடைய தமையன்மாருள் மூத்த வகிைய நல்லமன் புகழ் வருகிறது. இவனையே இரண்டாம் இராசா திராசனென்று கருதுகின்றனர், ஆராச்சியாளர். இவன் புகழை இவ்வுலா ஆசிரியர் கூறு வதைப் பார்ப்போம். எழும்திகிரி வெற்பை எனத்திகிரி யும்தன் செழுந்திகிரி யின்திமிரம் தீர்ப்ப-மொழிஅனைத்தும் வல்லமன் ஆதி மனுவினும் மேதக்க நல்லமன்.' இதல்ை இவன் ஆட்சி புரிந்து ஆணை செலுத்தியவன் என்பதும், பன்மொழிகளை அறிந்தவன் என்பதும், நீதிமுறை வழாதவன் என்பதும் தெரிகின்றன. - - - பிறகு மற்றெரு தமையனகிய குமார மகீதரனைப்பற்றிய செய்திகள் வருகின்றன. இவனே மூன்றங்குலோத்துங்கன் என்பதை முன்பு பார்த்தோம். - 'மலைக்கும் கடற்கும்.நடு மண்முழுதும் காத்துச் சிலைக்கும்பா தாளத்தைச் சீறித்-தொலைத்துப் பருந்து நிழற்பந்தர்ப் பல்லா யிரம்பேய் விருந்து களிப்ப விடுத்துக்-கருந்தலையின் குன்று குவித்துக் குவித்த பிணக்குவடு சென்று குருதித் திரைமிதப்ப-வென்றதற்பின் பூசற் குடகடற்கே போர்வாட் கறைகழுவித் - தேசத் தொழியாத் திறைகொண்டு-காசினிக்கே, பைத்த பொருபுலியைப் பல்கோடி வேந்தணிய வைத்த குமார மகீதரன்'