பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சங்கர ராசேந்திர சோழன் உலா செய்த மாந்தாதா, இந்திர விமானம் உகைத்த சோழன், இந்திரனே விட்ையாகக்கொண்டு ஊர்ந்த ககுத்தன், யமனுக்கு எதிர் நின்று வழக் குரைத்த பெருநற் கிள்ளி, முது மக்கட்சாடி வகுத்த சுரகுரு, தூங் கெயில் எறிந்த் தொடித்தேர்ட் செம்பியன், மேல் கடலேக் கீழ்கடல் வாய் விடுத்த சமுத்திர் ஜித், நாகர் கன்னிகையை மணந்த கிள்ளி வளவன், பாட்டுக்கு நூருயிரம் பொன் வழங்கியவன், பட்டினப் பாலைக்காகப் பதினறுகோடி பொன் வழங்கிய கரிகாலன், புறவுக்குத் தன் உடலை அரிந்து கொடுத்த சிபி, குடகு மலையைக் குடைந்து காவிரிக்கு வழி கண்ட காவிரிச் சோழன், காவிரிக்குக் கரைகட்டிய இரண்டாம் கரிகாலன், களவழிப்பாடல் கேட்டுச் சேரனே விடுதலை செய்த கோச்செங்கட் சோழன் இவர்கள் முதலில் கூறப்படுகின்றனர். இம் மன்னர்கள் இலக்கியங்களால் உணரப்படும் மன்னர்கள். இவர் களில் பாயிரம் பெற்றதொரு பாட்டுக்குப் பன்னொரு நூருயிரம் பொன் பணித்த அண்ணலும் என்று குறிப்பிடப்பெற்ற மன்னன் யாரென்று தெரியவில்லை. மற்றவர்களே ஒட்டக் கூத்தர் பாடிய உலாக்களில் இனம் கண்டுகொள்ளலாம். இனி அடுத்தபடி கல்வெட்டு முதலிய வரலாற்றுச் சான்றுகளால் அறியப்படும் மன்னர்களின் வரிசை தொடர்கிறது. அவர்கள்: தன் திருமேனியில் தொண்ணுாற்ருறு புண் கொண்ட விசயாலயன், தில்லையில் உள்ள ஞானத் திருமன்றத்தைப்பொன்னல் வேய்ந்த முதற் பராந்தகன், சேரைெடு பொருது வென்ற முதலாம் இராசராசன், கடாரமும் கங்கையும் கொண்ட இராசேந்திரசோழன், கலியாணம் அட்ட முதல் இராசாதிராசன், கொப்பத்தில் வென்ற இரண்டாம் இராசேந் திரன், திருவரங்கப் பெருமாளுக்கு மாணிக்கப் பாப்பணை செய்தளித்த இராசமகேந்திரன், கூடல சங்கமத்தில் வென்ற வீர ராசேந்திரன், கலிங்கத்துப் பரணிகொண்ட முதற் குலோத்துங்கன், கூடிய சீர்தந்த” என்று தொடங்கும் கூத்தன் உலாவைக் கொண்ட விக்கிரமசோழன், உலா பிள்ளைத் தமிழ் இரண்டும் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன், தன்னைப்பற்றிப்பாடிய உலாவுக்கு ஆயிரம் பொன் சொரிந்த இரண்டாம் இராசராசன். - இப்படி மன்னர்களின் வரிசையைச் சொல்லிவிட்டு, ' என்னும் இவர், மாசக்ரம் மேரு வலம் செல் மகரசல, பூ சக்ரம் ஏழும் புரந்ததற் பின்' என்று சொல்லிச் சங்கரசோழனுடைய தந்தை, தமையன்மார் ஆகியவர்களைச் சொல்கிருர் ஆசிரியர். சங்கரசோழன் தந்தை சங்கழன். இவன் விக்கிரம சோழனுடைய பெண்வயிற்றுப் பேரளுகிய நெறியுடைப் பெருமாளாக இருக்கலாம் என்பர் "திரு மு. அருளுசலம் அவர்கள். சங்கமனை இவ் வுலாவாசிரியர். 'பணியும் மனுகுலப் பாற்கடல் ஈன்ற மணியும் அமுதமும் மானக் - குணபால்’’

  • தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்ரும் நூற்ருண்டு, 1970-ப. 414,