பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 7 இரண்டாம் இராசாதி ராசனுக்குப் பிறகு அரசு சுட்டிலேறிய மூன்ரும் குலோத்துங்கன் இரண்டாம் இராச ராசனுடைய புதல்வன் என்பர் ஒரு சாரார். மூன்றம் குலோத்துங்க சோழன் வரலாற்றை எழுதிய அமரர் வி. ரா. இராமசந்திர தீட்சிதர் அவனைப்பற்றிப் பின் வருமாறு கூறுகிருர் : இராஜாதி ராஜனுக்குப் பின் குலோத்துங்கன் மகுடம் சூடினன், இவன் முடி சூடிய காலம் கி. பி. 1178 ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதிக்குள் எனக்கணிக்கப்பட்டுள்ளது. இக்குலோத்துங்கன் தன் முன்னேனுக்கு என்ன முறையினன் என்பதைச் சாஸனங்கள் மூலம் அறிய இடம் இல்லை. ஆல்ை, இலக்கிய வழியால் ஆராயும்போது இராஜாதி ராஜனுக்கு இளைய சகோதரன் இவன் என்றும், இராஜராஜ சோழன் தன் கடைசிக் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து தருவித்துத் தன் அரசுக்கு உரியவர்க ளாகத் தெரிந்தெடுத்த இரண்டு பிள்ளைகளுள் ஒரு வயதுடைய குழந்தையாயிருந்தவன் இவனே என்றும் தெரிய வருகின்றது. அஃதாவது விக்கிரம சோழனுடைய பெண்வழிக் கொட்பேரனும் நெறியுடைப் பெருமாள் என்ற சங்கம ராஜனுடைய இளையமகனு மாவான் என்பதாகும்" - - இந்த உலாவில் வரும் சங்கமன், குமார் மகித்ரன், ! சங்கர சோழன் என்பவர்கள் கொங்கு நாட்டில் உள்ள கொங்குச் சோழர் என்று அமரர் சதாசிவ பண்டாரத்தார் எழுதியிருக்கிரு.ர்.t குலமுறை இந்த உலாவில் சங்கர சோழனுடைய முன்னேர்களின் வரலாறு முதலில் வருகிறது. கலிங்கத்துப்பரணியிலும், ஒட்டக்கூத்தர் பாடிய மூவர் உலாக்களிலும் இந்தக் குல முறையைக் காணலாம். ஆதலால் சங்கர சோழன் சோழ நாட்டை ஆண்ட மன்னர் வழியில் வந்தவன் என்றே கொள்ளவேண்டும். இந்த உலாவில் வரும் பரம்பரையை இரு பகுதியாகப் பிரிக்கலாம். முதல் வரிசை பழைய நூல்களால் தெரியவரும் மன்னர்கள். இரண்டாம் வரிசை தக்க ஆதாரங்களுடன், வரலாறு தெரிய வரும் மன்னர்கள். மனுவரம்பு கண்ட ஆதி ம்னு சூரியன், தன் மகன் மேல் தேரை ஒட்டிய மனுச்சோழன், மானும் புவியும் ஒரு துறையில் நீர் அருந்தச்

  • மூன்ரும் குலோத்துங்க சோழன், 1941, ப. 34.

t பிற் காலச் சோழர் - வரலாறு , L. 1 44 -