பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சங்கர ராசேந்திர சோழன் உலா இராச ராச சோழன் மடந்தைக்குப் பலவகைப் பரிசுகள் தருவ தாகக் கூத்தர் பாடினர். முடியும்சிங் காதனமும் முத்தக் குடையும் படியும் அரசும் பணித்தான் (273) இங்கே, சங்கர சோழனும் தெரிவைக்குப் பரிசுகள் வழங்குகிருன். தாரும் கலனும் அனந்த சனபதமும் ஊரும் தமனிய ஓங்கலும்-ஆரும் தெரிசங் கரன்பாத சேகரன் வீரம் புரிசங் கரன்ஈந்து போந்தான் (336-7) உலாப்புறப்படல் சங்கரசோழன் உலா வரும் காட்சியை அழகாக வருணிக்கிருர் புலவர். பாற்கடல் போலப் பரந்துகிடந்த பாயலில் தன் தேவியுடன் துயின்றவன் துயில் எழுகிருன். அவனுடைய தேவி பெண்பாற்கு அரசு: அருந்ததி வந்து புகழும் தன்மையுடையவள். மறுவற்ற பொற்பாவை போன்றவள்; உலகம் அனைத்திற்கும் ஒரு தாய்; உலகத் துக்குத் திலகம் போன்ற குலத்தில் உதித்தவள். மன்னன் காவிரியிலிருந்து யானையின் மேல் பொற்குடத்தில் ஏந்தி வந்த நீரில் ஆடுகிருன்; காலையில் செய்யவேண்டிய செயல்களை வேத நெறிப்படி செய்கிருன்; அந்தணருக்குப் பொன்னை நீரோடு வழங்கு கிருன், பிறகு கோலம் செய்து கொள்கிருன். வெள்ளையான ஆடையை அணிந்து அதன் மேல் கச்சைக்கட்டி அதில் வாளைச் செருகிக் கொள் கிருன் முடியை அணிந்து கொள்கிருன்; காதில் மகரக் குழையை அணிந்து, கையில் முத்துத் தொடியைப் பூட்டிக்கொண்டு, மாணிக்கப் பதக்கத்தை மார்பிலும் மரகதத் தோள்வளையைத் தோள்களிலும் புனைந்து, உதரபந்தனத்தை அணிந்து, காவில் கழலைக் கட்டிக்கொள் கிருன். தோளில் அகில் குழம்பையும், சந்தனக் குழம்பையும் பூசித் திரிபுண்டரம் அணிந்து கொள்கிருன். பிறகு நிலைக் கண்ணுடி முன் நின்று பார்த்துக் கொள்கிருன். . அப்பால் சிவபெருமான வணங்குகிருன். இதைச் சொல்லும் போது உலா ஆசிரியர் சிவபெருமானைப் பல சொற்களால் சொல்லித் தம்முடைய சிவபக்தியைப் புலப்படுத்துகிரு.ர்.