பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை I 5 மேலேமதி, ஒன்று தவழ்பவழக் குன்றை உலகன்த்தும் சென்று கவிந்ததொரு செவ்வானைத்-தொன்று தொட்டு ஒதிச் சுருதி உததிதரும் எப்பொருட்கும் ஆதிப் பொருளை அடிவணங்கி (62-4) சங்கர சோழன் சிவபக்தன் என்பதைப் பின்பும், ஆரும், தெரிசங் கரன்பாத சேகரன்'" (33 6-7) என்று சொல்லுவார் இவ்வாசிரியர். சிவபெருமான வணங்கிய சோழ மன்னன் அரண்மனையின் வாயி லுக்கு வந்து பட்டத்து யானையின் மேல் ஏறி வீதியில் உலா வருகிருன். இங்கே இருபது கண்ணிகளால் அந்த யானையை வருணிக்கிருர் ஆசிரியர். அதை வெங்கைமா, போர் உவா, இயக்கோ, கொல்யானை, அயிராபதம் என்று பாராட்டுகிருர் கூற்றமாகவும் தீயாகவும் ஆலால மாகவும் மதவாரியாகவும் காற்ருகவும் பொதியிலாகவும் கயிலையாக வும் மேருவாகவும் உருவகம் செய்கிரு.ர். அது தன் துதிக்கையை நீட்டும்பொழுதெல்லாம் தன் கையி லுள்ள வில்லாகிய கரும்பைப் பறித்துத் தின்றுவிடுமோ என்று அஞ்சிக் காமன் அந்த வில்லை மறைத்துக் கொள்கிருளும்; அந்த யானை போர்க்களத்தில் எதிர்த்த எல்லா யானைகளின் வலிமையையும் அழித்து விடுகிறது; எட்டுத்திக்கயங்களும் தோல்வியுறும்படி சீறுகிறது; திசை யானைகளில் இரண்டுக்குக் குமுதம், புண்டரிகம் என்ற பெயருண்டு. எங்கேனும் குளத்தில் குமுதம் (ஒரு பூ), புண்டரிகம் (தாமரை) உள்ளன என்று சொன்னல் அந்தத் திக்கயங்கள் அங்குள்ளனவோ என்று எண்ணி அந்தக் குளத்தைப் போய்க் கலக்குமாம். பாண்டியன் வேப்ப மாலையையும் சேரன் பனே மாலையையும் சூடுபவன். அவ்விருவரையும் சோழன் இந்த யானையின் வலிமை கொண்டு வென்று விடுகிருன். அம்மன்னர்கள் தங்கள் மாலைகளைச் சூட முடியாதபடி தோல்வியுறுகிரு.ர்கள். ஒருகால் அவர்கள் அவற்றை அணிய எண்ணிஞலும் அவர்களுக்கு வேம்பும் பனையும் கிடைக்காமல் அவை வளரும் பொழில்களை அந்த யானை அழித்து விடுகிறதாம். மரங்களே ஒடித்து அழிக்கவில்லை. இறந்த மன்னர்களுக்குக் கல் நட்டு வழிபடுவார்கள். அதற்கு வேப்பிலையை அணிவார்கள்; பல மன்னர்