பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 சங்கர ராசேந்திர சோழன் உலா களைப் போர்க்களத்தில் அந்த யானை அழித்துவிட, அழிந்த வீரர் களுக்குக் கல் நட்டு வேப்பிலையை அணிகிருர்கள். அளவற்ற கற்களை நட்டு வழிபடுவதனால் எல்லா வேப்ப மரங்களையும் தறித்துவிடுகிருர் கள். போரில் வெற்றி பெற்ருல் அதைச் சிறப்பித்துப் பரணி என் னும் பிரபந்தம் பாடுவார்கள் புலவர்கள். அந்த யானை பல போர் களில் வெற்றி பெற்றதல்ை பல புலவர்கள் பலவகைப் பரணிகளைப் பாடுகிறர்கள். அவற்றையெல்லாம் பனை ஓலையில் எழுதுகிருர்கள். இதற்காக எல்லாப் பனை மரங்களையும் வெட்டி விடுகிரு.ர்கள். இவ் வாறு, பாண்டியனுக்கு மாலை தரும் வேப்ப மரங்களையும். சேரனுக்கு மாலை தரும் பனே மரங்களையும் அழிக்கும்படியாக அந்த யானை தன் வீரத்தால் செய்து விடுகிறதாம். இப்படி ஒர் அழகிய கற்பனையைப் புலவர் அமைத்திருக்கிருர், அத்தகைய பட்டத்து யானையின் மேல் ஏறிச் சங்கர சோழன் வீதியில் உலா வருகிருன். சந்திரனைப் போன்ற குடையைக் கவிக் கிருர்கள். கவரிகள் சுழல்கின்றன. புலிக்கொடி ஓங்கி நின்று அசை கிறது. சோழருக்குரிய கோரம் என்னும் குதிரை முன்னே செல்கிறது. அயலரசர்களும் யானைக் கூட்டமும் பலவகை ஆயுதங்களை ஏந்திய வீரர்களும் முன்னே செல்கிருர்கள். பலவகை இசைக் கருவிகள் முழங்குகின்றன. அந்தணுளரும் புலவரும் பொருநர்களும் வாழ்த்து கிரு.ர்கள். சோழ மன்னன் பெண்கள் வாழும் மாட வீதிக்குப் போகிருன். அங்கே பல பெண்கள் ஒன்ருகக் கூடி அவனுடைய திருவுலாவைக் காண வருகிரு.ர்கள். தங்கள் தங்கள் ஆடையும் ஆபரணமும் நழுவ அவர்கள் நிற்கிருர்கள். அவர்கள் உறுப்புக்கள் சோழ மன்னனை வரவேற்பதற்காக வைத்த பூரண கும்பம், கமுகு, கரும்பு, வாழை என்பவற்றைப் போல விளங்குகின்றன. மன்னனைப் பார்த்துப் பலபடி யாகப் பாராட்டுகிருர்கள். அவன்பால் காதல் கொண்டு உருகி, பேச முடியாமல் தடுமாறி, மேனி நிறம் முதலியவற்றை இழக் கிரு.ர்கள். பேதை அவர்களுக்குள்ளே ஒரு பேதைப் பருவப் பெண். அவள் சிற்றில் கட்டி விளையாடுகிருள். சோழ மன்னன் வருவதைக் காண்கிருள். எல் லாரும் தொழுவதைக் கண்டு தொழுகிருள். ஆனால் பேதையாத லின் அவளுக்குக் காம உணர்ச்சி எழவில்லை. அரசன் மார்பில் அணிந்த கவுத்துவ மணியைக் கண்டு, இதை என் மரப்பாச்சிக்கு அணிய வேண்டும்; வாங்கித் தாருங்கள்' என்று தாய்மார் மடியைப் பிடித்து இழுத்துச் சொல்கிருள். அவர்கள். அதைப் பெற முடியாது”