பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை . I 7 என்று சொல்லிச் சமாதானப்படுத்துகிரு.ர்கள். சோழமன்னன் அந்தத் தெருவைக் கடந்து செல்கிருன். - இந்தப் பேதை, அன்னம், மயில், கிளி ஆகியவற்றை வளர்க்கிருள். கூட்டி முடியாத கூந்தலையுடையவள். அவள் பற்களிற் சில விழுந் திருக்கின்றன. அவளிடம் காமன் ஜபம் பலிக்கவில்லை. அவன் தன் அம்பை எய்யாமல் போய்விடுகிருன். ஏழு பருவப் பெண்களில் மற்ற ஆறு பருவத்தினரும் சோழ மன்னனுடைய கோலத்தைக் கண்டு காமுற்றுத் தோற்கிருர்களாம். இவள் ஒருத்தியே ஏழு பங்கில் ஒரு பங்கு வென்றவர் உண்டு' என்று சொல்லும்படி எதையும் இழக் காமல் தன் இல்லத்துக்கு மீள்கிருளாம். கோனே, எழுபங்கின் ஒர்பங்கு வென்ருேருண்டென்னத் தொழுபங் கயக்கைத் தொடியும்-பழவடிவும் - சிற்றிடையும் கொண்டு திருமீண்டாள் (156-7) என்று புலவர் பாடுகிரு.ர். பெதும்பை அடுத்த பெண் பெதும்பை. இந்தப் பருவத்தைப் பாடுவது எளி தன்று என்று சொல்வார்கள். பேசும் உலாவில் பெதும்பை புலி' என்பது பழம் பாடல், . . பெதும்பை சகோட யாழ் எடுத்துப் பாடுகிருள். மற்றப் பெண்களின் கூட்டத்தோடு கூடாமல் ஒதுங்கி யிருக்கிருள். அவளுடைய பார்வையில் பேதைப் பருவத்துக்குரிய தன்மையும் மங்கைப் பருவத் தன்மையும் இணைந்திருக்கின்றன. குழலே முடித்திருக்கிருள். பருவம் வந்த மங்கைமார் காதல் வயப்பட்டுக் கொள்ளும் மெய்ப்பாடுகளை யும் செய்யும் செயல்களையும் கண்டு, எனக்கும் இப்படியான பக்குவம் வருமோ ! என்று மனத்துக்குள் ஆசைப்படுகிருள். அவள் தன் தோழியருடன் சோலைக்கு விளையாட எண்ணிப் போகும்போது சோழன் வருகிருன். அவனைக் காண்கிருள். அவள் ஓரளவு அவன்பால் விருப்பம் கொண்டாலும் அது காமமாகப் பரிணமிக்கவில்லை. தன் னுடைய தாய்மாரோடு சேர்ந்து அவனை வணங்கிவிட்டு அவன் மாலை யைப் பார்க்கிருள்; ஆனால் காமுருமல் அதைப் பார்ப்பதோடு நின்று விடுகிருள். அவனுடைய கண், முகம், செவ்வாய், தாள், கரம் ஆகிய தாமரைகளில் அவள் இதயமாகிய தாமரை சார்கிறது; உடனே அதை மீட்டுக் கொள்கிருள். உறவினர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு விடுப்பது போல இருக்கிறது இது. காமன் அம்பை எய்யாமல் மடக்கிக்கொண்டு போகிருன். அவள் மன்னனைப் பார்த்து வேறு