பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 சங்கர ராசேந்திர சோழன் உலா படாதது கண்டு தாய்மார்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அவர்கள் அவளை அழைத்துக்கொண்டு செல்கிருர்கள். பேதை தன் பருவத்துக் கேற்ற விளையாட்டுப்புத்தியில்ை மன்னனுடைய அழகையோ அங்கங்களையோ பாராமல் அவன் மார்பில் உள்ள கவுத்துவமணி வேண்டுமென்று அலைத்தாள். பெதும்பையோ தன் உறுப்புக்கள் பருவவளம் பெருவிட்டாலும் உள்ளத்தில் ஆசை கொள்கிருள். மன்னனுடைய அங்க எழிலைப் பார்க்கிருள், அப்படிப்பார்க்கும் அளவுக்கு அவள் வளர்ச்சி பெற்றிருக்கிருளேயன்றி, அவற்றில் ஆழ்ந்து காமம் <9fốồ) L- lí ! வில்லை. பெதும்பை பேதைக்கும் மங்கைக்கும் இடைநிலையில் இருப்பவள். அரும்புக்கும் மலருக்கும் இடைப்பட்ட போதாக இருப்பவள். 'பேதை அரும்பிப் பெதும்பை ஒரு போதாகி மாது மலர்ந்த வனப்பிளுள்' என்று கடம்பர் கோயில் உலாவில் வரும் கண்ணி இங்கே நினைவுக்கு வருகிறது. - மங்கை மங்கைப்பருவத்துப் பெண்ணே அடுத்தபடி காட்டுகிருர் புலவர். பருவ அழகு நிரம்பிய அவள் பல மகளிரோடு வெண்ணிலா முற்றத்தில் இருக்கிருள். அப்போது ஒருத்தி வந்து, சோழ மன்னன் உலாவருகிருன். அவனேக்கண்டு இவள் வளே முதலியவற்றை இழப்பதற்குமுன் அவற்றை இறுக்குங்கள்' என்று எச்சரிக்கிருள். மங்கை முன்பு அந்த அநுபவத்தை அறியாதவளாகையால் இருந்தபடியே வீதியிற்சென்று மன்னனைக் கண்டு வணங்குகிருள். அவன் அழகுவெள்ளத்தை மொண்டு உண்டு யானையைப் பார்த்து, இங்கே நிற்பாயாக, என்று தொழுகிருள். முன்னலே ஒருத்தி சொன்னபடி வளை முதலிய வற்றை இழக்கிருள். அரசன் அப்பால் செல்கிருன். உடன் இருந்த பெண்கள் சோழனைத்திருமாலாக வைத்து விளித்து முறையிடுகிரு.ர்கள். கண்ணளுகவும் இராமனாகவும் அவதரித்தபோது செய்த ஆடல்களை நினைப்பூட்டி, 'இவளுக்குத் துன்பம்தரும் இவற்றை நீ மாற்றக்கூடாதோ?’ என்று நைந்து புலம்புகிருர்கள். 'இவளுக்கு விடையின் கழுத்தில் கட்டிய மணி ஒசை துன்பந்தருகிறது. நீ நப்பின்னைக்காக ஏழு விடை களை அடர்த்தாயே, இந்த விடையை அடர்க்கக் கூடாதோ?’’