பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 1 § என்று கேட்கிருர்கள். புல்லாங்குழல் ஓசை காமுற்ருருக்குத் துன்பத்தை மிகுதியாக்கும். புல்லாங்குழல் துளையை மூடவும் திறக்கவும் பழகினயே; இந்தப்புல்லாங்குழலிலிருந்து வரும் இசை யாகிய நஞ்சை மூடக்கூடாதோ' என்று வினவுகிருர்கள். இப்படிப்பலபல விளுக்களை விடுக்கிரு.ர்கள். தாங்கள் எல்லோரும் கூடி மங்கையைப் பாதுகாக்கப் புகுந்தாலும் அவளுடைய விரகதாபம் அந்தக்காவலுக்குள் அடங்காது என்பதைப் பல உவமைகளேச் சொல்லிப் புலப்படுத்துகிருர்கள். யுகாந்த காலத்துக் கதிரவனுடைய வெயிலுக்குப் பரிகாரமாக வெண்ணெயால் குடைபண்ணி எடுக்க முடியுமா? மழையைத் தடுப்பதற்கு உப்பு:மலே பாதுகாப்பு ஆகுமோ? ஊழிக்காலத்துச் சமுத்திரத்தைச் சிறுவர் விளையாட்டில் கட்டும் அணையா தடுக்கும்? நெற்பயிரை உண்ண யானை வந்தால் அதற்குக் கரும்பால் வேலியிட்டுக் காப்பாற்ற முடியுமா? சோழமன்னன் அளித்த மையல் நோய்க்கு எங்கள் காவல் தடையாகுமா என்று அவர்கள் கேட்பதில் உள்ள நயம் அறிந்து மகிழத்தக்கது. மடந்தை அடுத்தவளாகிய மடந்தைப்பருவப் பெண்ணை, எழுபருவத்திலும் நடுநாயகமாக விளங்கும்படி வடிவமுள்ள மடந்தை என்று வருணிக் கிருர் ஆசிரியர். மேருவின் நடுவிலுள்ள மாற்றுச்சிறந்த பொன்னே உருக்கியும், ஆதிசேடனுடைய ஆயிரம் தலையிலுமுள்ள மாணிக்கங் களின் சோதி முழுவதையும் வாரியும் அமுதகலசத்து நடுவிலுள்ள அமுதத்தை மொண்டு கொண்டும் மதுக்கடல் தேன்கடல் என்னும் இரண்டின் நடுவில் சுவையான இடத்தில் அவற்றை வாரிக் கொண்டும் வந்து எல்லாவற்றையும் ஒன்ருகக் குழைத்து மன்மதன் அள்ளி அள்ளிக்கொடுக்க, பிரமதேவன் நன்ருக ஆராய்ந்து ஆராய்ந்து அழகாக உறுப்புக்களைச் சமைத்து அந்த மடந்தையின் வடிவத்தை வகுத்தாளும். அவள் முன் நின்று மாரன் பணி கேட்கிருளும். சோழன் பவனி வரும் மட்டும் சோலையில் சென்று விளையாடலாம் என்று அங்கே சென்று அங்கே நவமணிகளில் ஒவ்வொரு மணியிலுைம் ஒவ்வோருடலைக் கட்டியிருப்பதைக் காண்கிருள். அவற்றுள் சோழ னுடைய நிறத்தை உடையதென்று கருதி நீலமணியூசலில் ஏறுகிருள். சோழனுடைய தசாங்கங்களைப் பாடி ஆடுகிருள். அப்போது கூத்தர், பாணர், விறலியர், பாங்கியர் அவளைப் பாராட்டுகிருர்கள். அந்தச் சமயத்தில் சோழன் வீதியில் உலாவரவே அவள் ஊசலினின்று இழிந்து சென்று அவனைப்பார்க்கிருள்; பணிகிருள். மிக்கக் காமம் உள்ளே தோன்றி வழிய மடம், நாண் இரண்டையும் இழக்கிருள். வளையும் மேகலையும் அவளை விட்டு அகல்கின்றன. சோழன் சென்று விடுகிருன்.