பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சங்கர ராசேந்திர சோழன் உலா மறுபடியும் அவளைப் பூம்பொழிலுக்கு மகளிர் அழைத்து வருகிருர் கள். அங்கே இருந்த மான், வண்டு, மயில், அன்றில், அன்னம், புரு, கிளி ஆகியவற்றைப் பார்த்துத் தன் மயல் தோன்றப் பேசு திருள். பிறகு தன்னுடைய இல்லம் சென்று படுக்கிருள். அரிவை அடுத்த பருவத்துப் பெண் அரிவை. அவளுடைய பாங்கிமாரும் தோழிமாரும் சோழனுடைய பெருமையைச் சொல்லச் சொல்லக் கேட்டு மெய்யூரிக்கிருள். அப்போது விறவி ஒருத்தி வருகிருள். அவள் அரிவை யின் உறுப்பு நலன்களைப் புகழ்ந்து பேசுகிருள். அதற்கு மாருக அரிவை கேள்வி தொடுக்கிருள். 'உன் இடை பாம்போ?' என்று விறலி கேட்கிருள். அரிவை, 'பாம்பானல் மணியைவிடாதே! மன்னன் உலா வரும்போது தொழுதால் இந்தப் பாம்பு தான் அணிந்த மணி வடத்தை நழுவ விடாதோ?’ என்று எதிரே ஒரு கேள்வி கேட்கிருள். அவனைக்கண்டால் மேகலை நழுவுமே என்ற கவலையை உள்ளடக்கியது அந்தக் கேள்வி. இப்படியே, உன்னுடைய நகில் பொதிகைமலையோ?' என்று விறலி கேட்க, 'தென்றல் வீசினலும் வெம்மையடையாமல் பூசிய சந்தனம் உலராமல் தாங்குமோ?' என்று வினவுகிருள். இப்படியே இருவரிடையும் மாறி மாறி விளுக்கள் எழுகின்றன. அப்போது வீதியில் சோழன் வரவே அரிவை அவனைக் கண்டு தொழுகிருள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அன்பு பொங்க உருகி நெகிழ்கிருர்கள். அவன் அவளுக்குத் தன் ஆத்தி மாலையை கொடுக்கிருன். X- . . இது ஒட்டக்கூத்தர் உலாவிலும் இந்த உலாவிலும் காணும் புதுமை. அரிவை உளமகிழ்ந்து தன்ைேடு உரையாடிய விறவிக்குப் பொன்னை மிகுதியாக வழங்குகிருள். அரசனுடைய நெஞ்சு அரிவையை நோக்கிப் பின்னேவர, அவள் மனம் அவனே நோக்கி முன்னே செல்வ' அரசன் அவ்விடத்தைவிட்டு அகல்கிருன். - - விறலிக்கும் அரிவைக்கும் இடையே நிகழும் உரையாடல் மிகவும் சுவைபயப்பதாக அமைந்திருக்கிறது. தெரிவை அப்பால் வருகிருள் தெரிவை. பருவத்துக்கேற்ற உறுப்பு நலன்களே உடையவள் அவள். அவள் துயிலுணர்கிருள். கனவில் சோழ மன்னனோடு இன்புற்றதாகக் கண்டவள். இப் போது விழித்தவுடன் இரையை இழந்த அன்னத்தைப்போலவும்