பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 2 i மடுவிலுள்ள அலையைப்போலவும் மறுகுகிருள். கனவிலே உண் டான அறிகுறிகளை இப்போது காணுமல் வாடுகிருள். அரசன் உலாவருவதை அறிந்து வீதியில் சென்று அவனுடைய வடி வழகைக்கண்டு நிற்கிருள். 'என்னுடைய நாயகனே, எனக்குச் சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, கற்பகம், காமதேனு, மேரு மலை ஆகியவற்றை நீ வழங்கினலும் நான் வாங்கிக் கொள்ள மாட்டேன். உன்னோடு இன்புறும் கனவை மீண்டும் காணும் படி யான் இழந்த துயிலைத் தா' என்கிருள். சோழன் அவளினும் பதின்மடங்கு வேட்கையைக் கொள்கிருன். அவளுக்கு மாலையும் அணிகலனும் நாடும் ஊரும் பொற்குவையும் வழங்கிவிட்டுப் போகிருன். o - உலாவரும் தலைவன் வேட்கை கொள்ளுதலும் பரிசு தருவதும் ஒட்டக்கூத்தர் உலாவிலும் இந்நூலிலும் வரும் புதிய செய்திகள். - பேரிளம்பெண் இறுதியில் வருபவள் பேரிளம்பெண். அவள்தன் கூந்தலில் பிறை, சீதேவி என்னும் அணிகலன்களையும் பூவையும் புனைவதைத் துறந்தவள். கண்ணுக்கு மை தீட்டவில்லை. இதற்கு தற்குறிப் பேற்றமாகக் காரணங்களைச் சொல்கிருர் ஆசிரியர். சோழ னுடைய பகைவனகிய பாண்டியனுடைய குலத்தின் முதல்வன் சந்திரன்; ஆகையால் அவள் பிறை என்னும் அணிகலனை அணியவில்லை. சோழமன்னனுடைய மார்பில் இருக்கும் திருமகளும் தோளில் உள்ள பூமகளும் அவளுக்குச் சக்களத்திகள். ஆகையால் அவர்களின் பெயரைச் சுமந்த சீதேவி என்ற அணிகலனையும் பூவையும் அணியவில்லையாம். சோழனுடைய கரிய நிறமாகிய அஞ்சனத்தை அணிவதே போதுமென்று கண்ணுக்கு அஞ்சனம் திட்டவில்லையாம். சோழமன்னன் நாளைக்கு 巴@厂 வருவான்' என்று விறலியர் கூறக்கேட்ட அவள், காமுற்றவர்கள் வெறுக்கும் மாலை, கடல், சந்திரன், ஆவின் மணி, படுக்கை, சோழி ஆகிய வற்றை விரும்பி வரவேற்கிருள். அவையாவும் சோழனேடு தொடர்புடையனவாகக் காண்கிறவளாதலின் அவற்றை அவள் வெறுக்கவில்லை. சோழனுடைய குல முதல்வனகிய கதிரவன் புகும்படி செய்தமையால் மாலைக்காலத்தை வரவேற்கிருள். சோழனுடைய முன்னேர்களாகிய சகரர் தோண்டியமையின் கடல் அவளுக்கு நல்லதாகிறது. சோழனே திருமாலாதலின் அத்திருமால் பாற்கடலைக் கடைய எழுந்த சந்திரனும், சோழ