பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 சங்கர ராசேந்திர சோழன் உலா மன்னன் ஒருவன் இந்திரனே விடையாக்கி ஏறி ஊர்ந்தமையால் ஏற்றின்மணியும், சோழனைக் கனவில்கண்டு இன்புறவைத்ததனல் பாயலும், வேந்தன் பவனி வரும் காலநேரத்தைக் காட்டக் கூவுதலால் கோழியும் அவளுக்கு விரும்புதற்கு உரியவை ஆகின்றன. விடிகின்றது. தான் கனவிலே கண்டபடி சோழனைக்கிழியில் தீட்டலாம் என்று எண்ணிக் கிழியையும் வண்ணத்தையும் தோழிமார் தர வாங்குகிருள். அவன் திருமாலின் அவதாரம் என்று எண்ணும் அவள் அப்பெருமான் வடிவத்தை எழுத இயலாதே என்று ஏங்குகிருள். அப்போது ஒரு பெண், 'முன்னை அவதாரங்களை எழுத நம்மால் இயலுமோ? இப்போது சோழமன்னனாக அவதரித்து விளங்குவதை எழுதுக' என்று சொல்ல, அவள் தெளிவு பெறுகிருள். அப்போது மன்னன் வீதியிலே பவனி வரவே சென்று சேவிக்கிருள். அவனைப் புகழ்ந்து பாராட்டுகிருள். விரகதாபத்தால் மன்மதன் முதலியவர்கள் செய்யும் இன்னல்களை விலக்க வேண்டுமென்று முறையிடுகிருள். இங்கே அவனை இராமனுகவும் கண்ணன கவும் எண்ணி அவள் கூறுவன மிகவும் சுவையாக உள்ளன. 'கண்ணனுக வந்த போது வண்ணமகளின் கூனே நிமிர்த்திய நீ இந்தக் காமன் கரும்பு வில்லை நிமிர்த்தக்கூடாதோ? மாரீச மானைக் கொன்ற நீ சந்திரனிலுள்ள கலைமான எய்யக்கூடாதோ? காகத்தைச் செற்ற உன் அம்பு அதனல் வளர்க்கப்பெற்ற குயிலைச் செறலாகாதோ? மராமரம் ஏழைத் துளைத்த நீ என்னே வருத்தும் அன்றிற்கு இடமாகிய பனே மரத்தை அழித்தல் தவருே? முன்பு சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி இப்போதும் கொண்டு வருவது அரிதோ? மலைகளே அணையிற் போட்டுக் கட்டின போது தமிழ்மலை என்று தென்றலை உண் டாக்கி என்னே வருத்தும் பொதிய மலையை விட்டுவிட்டாயோ?” என்று அவள் கேட்கிருள். - சோழன் அவளுக்கு ஆத்தி மாலையைச் சூட்டிக் கருணைக் கடலில் ஆட்டுகிருன். இதுவும் புதிய செய்தி. இப்படிப் பருவத்து ஏழு வகைமைப்பாவையர் எல்லோரும் தெருவத்து இனையதிளேப்ப உலாவருகிருன் சங்கர சோழன். - சோழன் இயல்புகள் சோழனுடைய இயல்புகள் பலவற்றை இவ்வாசிரியர் கூறு கிருர், அவன் சிவபக்திச் செல்வமுடையவன் என்பதை முன்பு பார்த்தோம். அவன் தமிழில் அன்புடையவன் என்பதை,