பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 2 3 'தமிழ்ச்சங்கர சோழன்’ (காப்பு) என்பதலுைம், அவன் காதில் உள்ள குழையை, சால வினவுதமிழ்ச் செப்பொழுகும் தன்மை' போல இருப்பதாகச் சொல்வதனலும் (55), 'தமிழ் சிவந்து முற்றும் கனிவாய்' (32.5) என்று வாயைச் சிறப்பிப்ப தாலும், நூலோர், உருகிய செந்தமிழ்ச் செஞ்சாலி ஒங்கப் பெருகிய பொன்னிப் பெருக்கே' (375-6) என்று உருவகித்த லாலும் உணரலாகும். அவனுடைய வீரத்தைப் பலபடியாகப் புகழ்கிருர் அவனுடைய முன்னேர்களின் செயல்களை அவனுடைய செயல்களாக ஏற்றிச்சொல்கிரு.ர். இது புலவர்களின் வழக்கம். பண் நிறைந்த நாகர் மகள்மணத்துப் பாரித்த எண் இறந்த மாணிக்க ராகியோ (150) என்று அவனுடைய முன்னேரில் ஒருவன் நாக கன்னி கையை மணந்த செயலையும், கூற்றுக் கெதிரினும் கோத்துரந்த இந்திர ஏற்றுக் கண்மணிஎன் றேமுற்ருன் என்று இந்திரனை விடையாக ஊர்ந்த முன்னைச் சோழன் ஒரு வன் செயலையும் சங்கர சோழன் செயலாகச் சொல்கிரு.ர். இப்படியே, - . பரணி - х கவியாற் செயங்கொண்டான் கட்டுரைப்பக் கொண்டான் (388) என்று குலோத்துங்கன் பெற்றதையும், கூத்தன் நிகழ்த்த ஒருமூன்று . உலாக்கொண்டான் < (389) என்று விக்கிரம சோழன் முதலிய மூவர் பெற்றவற்றையும் இவன் பெற்றதாகச் சொல்கிரு.ர். . திருமாலின் செயல்களைச் சங்கர சோழனுக்கு ஏற்றியும் அவ்வாறே இராமன், கண்ணன் ஆகியோர் செயல்களை ஏற்றியும் கூறுவதும் அச்செயல்களில் பலவற்றைப் பொருத்தமான வகையில் இணைத்துக்கற்பனை நயம்பெற அமைப்பதும் இந்நூலில் பல இடங்களில் காணலாம். - பார் அளந்த பாதத்து எறிகடற் - . காந்திய நீலக் கழல்வீக்கி -59( .س) இது திரிவிக்கிரமாவதாரத்தை நினைந்தது.