பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்கர ராசேந்திர சோழன் உலா மாற்றவள் என்ப துணராது மன்இருதோள் ஏற்றவள் பால்ஏற்றும் எல்லேக்கண் (141) என்பது நிலமகள் நாயகனென்பது கருதிச் சொன்னது. இப்படி வரும் இடங்கள் பலப்பல. - இவ்வாசிரியர் தம் கூற்ருகவும் மகளிர் கூற்ருகவும் சங்கர சோழனைப் புகழ்ந்து கூறும் சொற்களும் சொற்ருெடர்களும் அவனுடைய இயல்புகளையும் சோழமன்னர்களின் பெயர்களையும், நினைப்பூட்டுவன. அவை வருமாறு: அகளங்கன், அடலோன், அண்ணல், அபங்கன், அபயர்பெருமான், அபயன், அரசர் குலாந்தகன், அரசன், அரசு, அவனிபர் சிங்கம், அவினவன், அனகன், அனந்த கலாகரன், அனபாயன், அனுபமன், ஆரப் பிரசன், ஆரியன், இரவிகுலன், உத்துங்கதுங்கன், உபயகுலோத் தமன், உறந்தை வேந்தன், எந்தை, எம்கோன், கங்காபுர rாசன், காத்தரசு கொண்டான், கவிகைநிலாக்கொண்டான், காவலன், காளமேகம், குடையோன், கையம்பின் மையம்பை எய்தவன், சைதவன், கொடைவேந்து, கேர, கோமகன், கோமான், கோரன், கோழிவேந்தன், கோன், சக்ரபரிபாலன், சங்கம சங்கர சோழன், சங்கரராச தயாநிதி, சங்கர ராசன், சங்கரவேந்தன், சங்கரன், சங்கரன் பாதசேகரன், சயதரன், சனதிபன், சாயசத்தைவிடும்சரன்; சீலன், செங்கமலே காந்தன், சென்னி, செம்பியன், சேவகன், சோளுட்டிறையவன், சோ ளுடர் பார்த்திபன், சோழன், சோளேசன், சோளேந்திரன், தகையோன், தரணி மன்னன், தவனகுலமன், தாழார் கருவைத் துடைத்தோன், திகந்தம் இரு நான்கும் தொழும்தாளோன், திகிரிப்பகவோன், தினகரன், துங்கமன், தோன்றல், நவநீதச் சளவன், நாயகன், நிருபன், நிருபாபிடேகன், நிலம் ஏழுக்கு ஒருவன், நேரலர் காலன், நேரியன், பரணிகொண்டான், பரராசசேகரன், பருதி மரபாபரணன், பாடற்கொளை குடிய ஆரன், பிரான், புத்தேள்வளத்தொன்னுடன், புவி வனிதை காந்தன், பூலோக சூரியன், பெரு வளவன், பொன்னிருதி ராசன், போதகலாமாதுமணக்கும் மணவாளன், மன், மன்னன், மனு குலக்கோன், மனுதுங்கன், மனுவேந்தன், மாற்றலர் காலன், மானுகரன், முறை துறவாதான், மூன்றுலாக் கொண்டான், ராச சிகாமணி, ராச திவாகர்ன், வளவர்குலவிளக்கு, வளவன், வானவன், வீரக்கவசன், வீரதனுகரன், வீரோதயன், வேந்தன், வேந்து, வேங்கைத்துவசன். - - சோழனுடைய தசாங்கங்கள் ஒருங்கே ஓரிடத்தில் வரு கின்றன. (242) அவை: (1) மலே - நேரி, (2) ஆறு - காவிரி,