பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 2 5 (3) நாடு - சோழநாடு (நீர் நாடு), (4) குதிரை - கோரம், (5) மாலை - ஆத்தி, (6) முரசு - மும்முரசு, (7) கொடி - வேங்கை, (8) யானை - அயிராபதம், (9) நகர் - காவிரிப்பூம்பட்டினம், (10) ஆணே - பேரானே. இவற்றில் சிலவற்றைத் தனித்தனியே சில இடங்களில் சொல்லுகிருர், நேரியனை (123), நேரியன்’ (I 69) என்னும் இடங்களில் நேரிமலையைக் குறிக்கிரு.ர். காவிரியைப்பற்றிய செய்திகள் பல இடங்களில் வருகின்றன. காவிரியைக்குடகினுள்டே வழி கண்டு ஒரு சோழன் பாயச் செய்கிருன் (12), அவ்வாற்றுக்குக் கரிகாலன் கரை அமைக் கிருன் (18); சங்கர சோழன் காவிரித்தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்து கொள்கிருன் (48); பொன்னிநதி ராசன் என்று அவனைப் புகழ்கிருர் ஆசிரியர் (113.4); செந்தமிழ்ப்பயிரை வளர்க்கும் பொன்னிப்பெருக்காக விளங்குகிருன் அவன் (376). சோணுட்டிறையவன், சோனடர் பார்த்திபன் (289, 142) என்பவற்றில் சோழ நாட்டை இணைத்துள்ளார். சோழன் குதிரையாகிய கோரத்தை, கோரக் கதி செல்ல (90) என்பதிலும், ஐங்கதிக் கோரன் (371) என்பதிலும் காட்டு கிருர். சோழனுடைய மாலையாகிய ஆத்தியை ஆர், ஆரம், தாதகி என்று பரியாய நாமங்களால் சொல்கிரு.ர். (124, 169, 179, 252, 386). 'கடைத்தலை மும்முரசம் கண்இரட்ட', (41) என்று மும்முரசம் முழங்குவதைக் கூறுவார். கொடி, யாகிய வேங்கையைப்புலி என்றும் கொடுவாய் என்றும் சித்திர காயம் என்றும் கூறுகிரு.ர். புலி அடையாளத்தைப் பலவேந் தர்கள் அணிகிருர்கள் (37); மேருமலையில் புவி இலச்சினையைச் சோழர் பொறித்தனர் (50, 307, 382), புலிக்கொடி சூரிய மண்டலம் வரைக்கும் உயர்ந்து தோன்றுகிறது (88), பாண்டிய னுடைய மீன்கொடியை ஒட்டிவிடுகிறது (129); வேங்கைத் துவசன் (356) என்பது சோழன் பெயர். பட்டத்துயானையைச் சொல்லும் போதெல்லாம் அயிரா பதம் என்றே சொல்வார். அதன் சிறப்பைப் பல கண்ணிகளால் சிறப்பித்ததை முன்பு பார்த்தோம். புகார் நகரைத் தாமப் புகார் (250) என்பர்; தாமம்-ஒளி. தெய்வங்கள் பல தெய்வங்களைப்பற்றிய செய்திகள் அங்கங்கே வரு கின்றன. காப்பில் சிவப்பு நிறமுள்ள விநாயகரையும், தேவ. யானை மணவாளனுகிய முருகப்பெருமானையும் சொல்கிரு.ர். சிவபெருமான் புகழ் பலபடியாகப் பேசப் படுகிறது. அவன்