பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சங்கர ராசேந்திர சோழன் உலா பவழக்குன்று போலவும் செவ்வான் போலவும் விளங்குகிருன் (63); வேதத்தில் உள்ள எல்லாப் பொருளுக்கும் ஆதிப்பொருள் (64); அவன் மறையவன் (96); அவன் தன் கையில் துடியை உடையவன் (63); பூரணன், ஆலப்பேருண்டியான், జీప్" క్ష] காலன் என்னும் திருநாமங்களை உடையவன் (309-10). திருமால் வெண்பாற்கடவில் துயில்கிறவர் (43, 189, 295); வலம்புரியை ஏந்தியவர் (94); பூமிதேவியின் நாயகர் (97), திகிரியை ஏந்துபவர் (121), குயில் போன்ற கரியநிற முடையவர் (198); தம் திருமார்பில் திருமகளை உடையவர் (240). சோழனைத் திருமாலாகச் சொல்லும் இடங்களில் அப் பெருமானைப்பற்றிய பல செய்திகளைக் காணலாம். திருமகள், காளி, பூமிதேவி, பிரமன், இந்திரன், ஆதி சேடன், காமன், யமன், புதன் ஆகியவர்களே இடையிடையே காணுகிருேம். விரச்செயல்கள் அரசர் செய்யும் வீரச்செயல்கள் பலவற்றைச் சொல்கிருர் ஆசிரியர். போர்க்களத்தில் ஊனே உண்பதற்காகப் பருந்துகள் கூட்டமாகப் பறந்து பந்தர் போட்டாற்போல் இருக்கும் என் பதையும், பேய் பிணங்களை உண்டு களிக்கும் என்பதையும், பருந்து நிழற்பந்தர்ப் பல்லா யிரம்பேய் விருந்து களிப்ப விடுத்தும் (34) என்ற கண்ணியில் காணலாம். பகையரசர்கள் வென்ற வேந் தனின் இலச்சினையை அணிதல் மரபு (37); மேருமலையின் மேல் அதைப் பொறித்தல் சோழர் வழக்கம் (50, 307, 332); பகைவேந்தர் காலில் விலங்கிடுதலும், அவர்கள் திறையிட்டால் அதைத் தறித்து விடுதலும் அரசருக்கு இயல்பு (40); இறந்து போன வீரர்களுக்குக் கல் நட்டு அதன்மேல் வேப்பிலேயை அணி வார்கள் (82); பலயானைகளை அட்ட வீரனைப் புகழ்ந்து புல வர்கள் பரணி பாடுவார்கள் (83) வழக்கங்கள் குறத்தி குறி சொல்ல அவளுக்குப் பொன் அளிப்பதும் (167), விறலிக்குப் பரிசு வழங்குதலும் (302), கிளி, குயில், மயில் ஆகியவற்றைத் தூதுவிடுவதும் (168), பறவைகளையும் மானேயும் வளர்த்தலும் மகளிர் வழக்கம்.