பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சங்கர ராசேந்திர சோழன் உலா காணுமற்போயிருக்கக்கூடுமென்றும் அந்த ஏட்டின் இருபக்கங் களிலுமுள்ள சில கண்ணிகளே விடுபட்டுள்ளன வென்றும் தோன்றுகிறது. தெரிவையைப் பிறமகளிர் வாவிக்கரைக்கு அழைத்துச் செல்கிருர்கள். அப்பாலுள்ள பகுதியே காணப் படவில்லை. நீராட்டயர்ந்தபோது சோழன் உலாவரவே, அவனைச் சென்று தெரிவை காணும் வரையிலுள்ள செய்திகள் அப்பகு தியில் இருக்க வேண்டும். விடுபட்ட பகுதி போக எஞ்சிய கண்ணிகள் 389. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகிய செந்தமிழ்ப் பத்திரிகையில் 7-ஆம் தொகுதி 12-ஆம் பகுதியிலும், 8-ஆம் தொகுதி 1, 3, 5, 7-ஆம் பகுதிகளிலும் இந்த உலாவின் மூலம் வெளியாகியிருக்கிறது. 309 கண்ணிகள் வரையிலுமே வெளிவந்து நூல் குறையாகவே நிற்கிறது. கையெழுத்துப் பிரதியையும் செந்தமிழில் வெளியானதை யும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சிறந்தபாடங்களேத் தேர்ந்தெடுத்து இந்தப் பதிப்பை சித்தப் படுத்தினேன். பிறகு குறிப்புரையை எழுதி முடித்தேன். சோழ மன்னர்களின் பெருமையைச் சொல்லும் மூவருலாவோடு ஒப்ப வைத்து எண்ணத்தகும் இந்த உலா ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயன்படும் என்று எண்ணு கிறேன். இந்த நூலை ஆராயும் போதும் குறிப்புரை எழுதும் போதும் உடனிருந்து உதவிய திரு. மு. கோ. இராமனுக்கும் சென்னை முத்தியாலு பேட்டை, உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. புலவர் S. சீனிவாசனுக்கும் என்னுடைய நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். அரசினரும் தமிழ்மக்களும் போதிய ஆதரவு தந்தால், ஐயரவர்கள் தொகுத்துவைத்துள்ள இது போன்ற பல அரிய நூல்கள் வெளிவரும் வாய்ப்பு உண்டாகும். காந்தமலே கி.வா.ஜகந்நாதன். சென்னை-28 3-1 2-76