பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா (காப்பு) சங்கமன் தந்த தமிழ்ச்சங் கரசோழ துங்கமன் மீதுலாச் சூட்டவே-அங்கேழ் அரக்கிளவி நாயகனும் ஆனையாம் தேன்.ஆ கரக்கிளவி நாயகனும் காப்பு. (நூல்) சோழர் குல முறை 1. நீர்பூத்த வண்ணத்து நேமி திருமகன்கை ஏர்பூத்த வையகம் ஈரேழும்-தார்பூத்த 2 தண்டு கவரத் தனதுகுடைக் கீழ்அடையக் கண்டு மனுவரம்பு கண்டோனும்-மண்டலமும் காப்பு: சங்கர சோழனுகிய துங்கமன், துங்கமன் - தூய மன்னன். அம் கேழ் அரக்கு இள விநாயகனும் - அழகிய நிறம் அரக்குப்போன்ற இளமையையுடைய விநாயகப்பெருமானும். ஆனையாம் தேன் ஆகரக் கிளவி நாயகனும் - தெய்வயானை அம்மையாராகிய தேனைப்போன்ற சுவைக்கு இடமாகிய மொழியையுடைய தேவிக்கு மணவாளனுகிய முருகப்பெருமானும்: தேன் ஆகரக்கிள்வி : அன்மொழித்தொகை. விநாயகன், முருகப்பெருமான் ஆகிய இருவருக்கும் காப்புக் கூறினர். 1. நீர்பூத்த வண்ணம் - கடல்நீரைப் போன்ற நீல நிறம். நேமிதிருமால். திருமகன் - அவனுடைய புதல்வகிைய பிரமன், கை ஏர் பூத்த - அவனுடைய கைவண்ணத்தால் தோன்றிய தார் - அணி வகுப்பு. - 2. தண்டு - படை. மனுவரம்பு கண்டோன் - மனுநீதியின் எல் லேயைக் கண்டவன்; மனு என்னும் அரசன். 1-2. வையகம் ஈரேழும் தனது குடைக்கீழ் அடையக் கண் டோன்.