பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - சங்கர ராசேந்திர சோழன் உலா 3. வெம்மலைக் கோடு வலனேடும் வெய்யோனும் செம்மலைப் பண்டுர்ந்த தேரோனும்-எம்மறிக்கும் 4. இம்பர் அடுபுலிக்கும் ஒக்கநீர் ஈந்தோனும் உம்பர் விமானம் உகைத்தோனும்-வெம்போகம் 5. மிக்க புரந்தரன்ஊர் வேந்தனும் அக்கூற்றுக் கொக்க வழக்கன் றுரைத்தோனும்-திக்கனத்தும் 6. தாங்கி முதுமக்கட் சாடி யமன்படையின் வாங்கி ஒளிப்ப வகுத்தோனும்-தூங்கிய 3. வெம்மலைக் கோடு - மேருசிகரம். வலன் ஒடும் - வலமாகச் சுற்றிவரும். வெய்யோனும் - கதிரவனும். உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு (முருகு. 1-2). செம்மலே - தன் மகளுகிய அரசனே. தேரோன் - மனுச்சோழன் (விக்கிரமசோழன். 4; குலோத் துங்க.2; இராசராச.3.) மறி-மான். - 4. இம்பர் - இவ்வுலகத்தில். 3-4. மானும் புலியும் ஒரு துறையில் நீர் அருந்தச் செய்த அரசன் மாந்தாதா (விக்கிரம சோழன்.5 குலோத்துங்கன். 7. இராச ராச.5. கலிங்கத். இராசபாரம்.12; கம்பர். குலமுறை.5.) உம்பர் விமானம் - இந்திர விமானம். ஒரு சோழன் இந்திரவிமா னத்தை ஊர்ந்தானென்று சோழ ராசாக்கள் சரிதம் என்னும் பழைய நூலில் காணப்படுகிறது (விக்கிரம. 6). - 5. புரந்தரன் ஊர் வேந்தன் - இந்திரனை விடையாகக் கொண்டு ஊர்ந்தவன்; ககுத்தன். அக்கூற்றுக்கு - அந்த யமனுக்கு அ : உலகறி சுட்டு. ஒக்க சமானமாக யமனுக்கு எதிர்நின்று வழக்குரைத்த சோழன் பெருநற்கிள்ளி என்று குலோத்துங்க சோழனுலாவின் பழைய உரை கூறுகின்றது (விக்கிரம.7; குலோத்.6; கலிங்க.இரா.ச.15). 6. தாங்கி - பாதுகாத்து. முதுமக்கள் சாடி ஆண்டு முதிர்ந்து மிகத் தளர்ச்சி அடைந்தவர்களை உள்வைத்து உணவு முதலியன வழங்கும் பானே. பகுத்தோன் - சுரகுரு; இவனே நாடாகன் என்பர் குலோத். உலா, பழைய உரையாசிரியர் (விக்கிரம. 8; குலோத்.12; குலோத். பிள்ளைத். 39; திருவெண்காட்டுப் புராணம், சத்தியநல் விரதச்.9.) தூங்கிய - வானத்தில் தொங்கிய, . .