பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலர் 3 7 தாழ்கடகம் அன்றெறிந்த தக்கோனும் மேல்கடலைக் கீழ்கடல் வாய்விடுத்த கிள்ளியும்-ஏழ்கடல் 8. மண்ணைப் புணர்ந்த முடியுடை மாநாகர் பெண்ணைப் புணர்ந்த பெருங்கோவும்-பண்ணிய 9. பாயிரம் பெற்றதொரு பாட்டுக்குப் பன்ைெருநூா ருயிரம் பொன்பணித்த அண்ணலும்-சேயதொரு 10. பாடிய பாக்கொண்டு பண்டு பதினறு கோடி பசும்பொன் கொடுத்தோனும்-ஒடித் 11. திருநிறை தன் அடைந்த செந்தாட் புறவப் - பெருநிறை புக்க பிரானும்-பொருபொன்னிப் 7. கடகம் - படை. தக்கோன் - துரங்கெயில் எறிந்த சோழன் (புறநா.39; பழமொழி.155; சிலப்.3.29; மணி.1:3; விக்கிரம. 9; குலோத் 13); இவனைத் துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்பர். கிள்ளி - சோழன்; இவனைச் சமுத்திரசித் என்றும் சம்ஹர்ஷண சக்கரவர்த்தி என்றும் கூறுவர் (விக்கிரம.9; குலோத். 14; இராசராச,14; கலிங்க.இராச.14). 8. மண்ணேப் புணர்ந்த முடியுடை மாநாகர் - பூமியைத் தாங்கிய தலையையுடைய பெரிய நாகர்; ஆதிசேடனை நினைத்துச் சொன்னது. மாநாகர் பெண்ணை - நாகலோகத்துக் கன்னிகையை. செவ்வந்திப் புராணத்தில், சூரவாதித்த சோழனென்பவன் நாகருலகம் சென்று நாக கன்னிகையாகிய காந்திமதியை மணந்து அங்கிருந்து வெற்றிலைக் கொடியைக் கொண்டுவந்து சோழநாட்டில் பயிரிட்டான் என்ருெரு செய்தி வருகிறது (விக்கிரம. 10: குலோத்.19; இராசராச.16; கலிங்க.இரா.ச.18); இவனைக் கிள்ளிவளவன் என்பர். 9. பாயிரம்-வரலாறு. இந்தச் சோழன் யாரென்று தெரியவில்லை. 10. பாடிய பா-பட்டினப்பாலை. கொடுத்தோன்-கரிகால்வளவன். கடியலூர் உருத்திரங்கண்ணனர் பாடிய பட்டினப்பாலையைக் கேட்டுக் கரிகால் வளவன் பதினறு லட்சம் பொன் கொடுத்தான் என்றும் பதினறு கோடி க்ொடுத்தான் என்றும் கூறுவர்; கலிங்க.இரா.ச.21, பத்தொடாறு.நூ ருயிரம்பெற’’ என்று கூறும்; பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினறு, கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே (193) என்பது தமிழ்விடுதுTது. - - 11. திரு நிறை - செல்வம் நிறைந்த தன் அடைந்த தன்னைப் புகலாகப் புக்க. புறவப் பெருநிறை - புருவுக்கு ஒப்பான பெரிய நிறை.