பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சங்கர ராசேந்திர சோழன் ஆவா 12. பேரா றருகு பெருகக் குடகூடற் - . ருேராறு கண்ட உரவோனும்-ஈரருகும் 13. எண்கரை செய்யா தெறிதிரைக் காவிரிக்குத் தண்கரை செய்த தராபதியும்-திண்கனக 14. வெங்கைக் களவழிப் பாடலுக்கு வில்லவனைக் கொங்கைத் தளைகளைந்த கோமானும்-செங்குருதி 15. புண்ஊறு தன்திரு மேனியில் பூணுகத் தொண்ணுாறும் ஆறும் சுமந்தோனும்-கண்ணு தலோன் பிரான் - சிபிச்சக்கரவர்த்தி. இவன் சோழர்களுக்கு முதல்வன் (புறநா. 37, 39, 43, 46; சிலப்.20-52, 23.58; 27-166-8; கம்ப.குல முறை. 7; விக்கிரம. 11; குலோத் 17, இராசராச. 6: கலிங்கத். இராச. 13.) 11-2. பொன்னிப் பேராறு - காவிரியாகிய பெரிய ஆறு. குடகு ஊடு அற்று ஓர்ஆறு கண்ட - குடகுமலையின் ஊடே அறுத்து ஒரு வழியை உண்டாக்கிய, குடகுமலையைக் குடைந்து காவிரியை அதன் வழியே பாயச்செய்தான் ஒரு சோழன் என்று ஒரு வரலாறு வழங்கு கின்றது. இவனைச் சிஆகன் என்பர். கவேரராசன், காந்தமன், காவிரிச் சோழன், சித்திரரதன் என்று பலவாருகக் கூறுவதுமுண்டு (கலிங்க. இராச. 15; விக்கிரம. 12: குலோத். 12: இராசராச. 12.) உரவோன் - வலிமையுடையவன். ஈரருகும் - இரண்டு பக்கமும். 13. கரைசெய்யாது - கரைந்துபோகச் செய்யாமல். தராபதி - அரசன். காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன் (விக்கிரம. 1.3; குலோத், 18.) . . . 13-4. திண்கணக வெங்கை - திண்ணிய பொன்னைச் சொரியும் வெவ்விய கையால். களவழிப் பாடலுக்கு - பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழி நாற்பது என்னும் நூலுக்கு. வில்லவனே - சேரமான் கணக்கால் இரும்பொறையை கொங்கை - கொங்கு நாட் டில்; உருபுமயக்கம். தளை களைந்த - விலங்கை நீக்கிய. கோமான் - கோச்செங்கட்சோழன். இச்சோழனும் சேரமானும் கொங்குநாட்டி லுள்ள திருப்போர் என்னும் இடத்தில் போர் புரிந்தார்கள் என்றும், அப்பொழுது சேரனைச் சோழன் வென்று தளையிட்டுச் சிறைப்படுத்தி ன்ை என்றும் வரலாறுண்டு. 14-5. செம் குருதி புண் ஊறு - செம்மையான இரத்தம் புண்ணில் ஊறுகின்ற, பூணுக - அணிகலனைப் போல. விசயாலயச் சோழன் பல