பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 岳 16. நாடகத்தால் ஆனதிரு ஞானத் திருமன்றம் ஆடகத்தால் வேய்ந்த அபயனும்-ஊடிய 17. சிந்தனைக் கேரள நாடொரு நாள்சிந்திச் - சந்தனைப் பார்த்த தகவோனும்-சிந்துரத்தைக் 18. காந்தரிக் கொப்பக் கடாரமும் கங்கையுங்கொண் டேந்தரிப் பீடத் திருந்தோனும்-போந்தெரியிற் 19. கொல்யானைத் தானே கொடுமும் மடங்குபோய்க் கல்யாணம் அட்டதனிக் காவலனும்-நல்யானை 20. ஒன்ரு யது.பிணிப்பக் கொப்பத் தொருதடக்கைக் குன்ரு யிரம்பண்டு கொண்டோனும்-மன்றலம் போர்களில் பகைவரை எதிர்த்துப் பல விழுப்புண்களைக் கொண்டவன். அவனேயே தொண்ணுாற்ரு:று புண் கொண்டவன் என்பர் (விக்கிரம. 15: குலோத். 21; இராசராச. 19.) 16. நாடகம் - நடனம். ஞானத் திருமன்றம் - திருச்சிற்றம்பல மாகிய சிற்சபை, நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகனே' (தாயுமானவர்.) ஆடகம் - பொன். அபயன் - சோழன்; இவன் முதற் பராந்தகன் (விக்கிரம. 16). 16-7. ஊடிய - மாறுபட்ட சிந்தனைக் கேரள நாடு - கவலையை யுடைய சேர நாடு. சந்தன - தூதுவன: சந்து - தூது. தகவோன் - முதலாம் இராசராசன். தன்னுடைய துTதுவனைச் சேரமான் அவமதித் தான் என்பதை உணர்ந்து முதலாம் இராசராசன் சேரநாட்டுக்குச் சென்று மன்னளுெடு பொருது வென்முன் என்பது வரலாறு (விக்கிரம. 17; குலோத் 24: இராசராச. 21.) - 17-8. சிந்துரத்தைக் காந்து அரிக்கு ஒப்ப - யானையை எதிர்த்து வெல்லும் சிங்கத்தைப் போல, அரிப்பீடத்து - சிங்காதனத்தில். கங்கையும் கடாரமும் கொண்டவன், இராசேந்திர சோழன். இவனைக் கங்கைகொண்ட சோழன் எனவும் கூறுவர் (விக்கிரம. 18: குலோத். 25.) எரியின் - நெருப்பைப் போல. 19. மும்மடங்கு - மூன்று முறை. கல்யாணம் - சாளுக்கியரின் தலைநகரான கல்யாணபுரம். காவலன்-இரா.சாதிராசன் (விக்கிரம,19) 19-20. நல்யானை ஒன்ரு யது- நல்ல பட்டத்து யானை ஒன்ருக உள்ளது. பிணிப்ப-அடிப்படுத்த. கொப்பம் - ஒரூர்; இப்போது கித்ராபூர் என்று வழங்கும் ஊர் என்று கூறுவர். ஒரு தடக்கைக் குன்று - யானே. கொண்டோன் - இரண்டாம் இராசேந்திரன் (விக்கிரம. 20; இராச 扩T字,召4.)