பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

份 சங்கர ராசேந்திர சோழன் உலா 21. காப்டனைக் கோயிற் கருமுகிற்கு மாணிக்கப் பாப்பணே செய்தளித்த பார்த்திபனும்-காப்பாணக் 22. கூடல சங்கமத்துக் குஞ்சரம் பல்கோடி ஆடலம் பொற்பரணிக் கட்டோனும்-கூடலார் 23. உம்பர் அணிகொள்ளக் கொல்வித் தொருகலிங்க வெம்பரணி கொண்ட விறலோனும்-செம்பதத்துக் 24. கூடிய சீர்தந்த என்றெடுத்த கூத்தன்.உலாச் சூடிய விக்கிரம சோழனும்-பாடிய 25. வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டும்.அவன் பிள்ளைத் தமிழ்மாலை பெற்ருேனும்-தெள்ளியதன் 20-21. மன்றல் அம் கா பனை கோயில் - மனம் பொருந்திய அழகிய பொழில்களும் வயல்களும் கூடிய திருவரங்கம். கருமுகிற்கு . மேகம் போன்ற நீல நிறம் பொருந்திய அரங்கநாதருக்கு. பாம்பு அணைசேஷசயனம். பார்த்திபன் - இராசமகேந்திரன் (விக்கிரம. 21). 21-2. காப்பு அரணம் - காப்பாகிய மதில்களையுடைய. கூடல சங்கமம் - துங்கபத்திரையும் கிருஷ்ணு நதியும் கூடுமிடத்துள்ள ஒருர், இங்கே நடந்த போரில் வெற்றி பெற்றவன் வீரராசேந்திர சோழன் (விக்கிரம. 22: இராசராச. 25.) இக்கண்ணியால் கூடலசங்கமப்பரணி என்று ஒரு நூல் இருந்திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. ஆடல் - வெற்றி. பரணிக்கு - பரணி நூல் பெறும்பொருட்டு. அட்டோன் - அழித்தவன். கூடலார் - பகைவர். - 23. உம்பர் அணிகொள்ள - தேவருலகத்துள்ள படையொடு சேர்ந்து கொள்ள, கலிங்கத்துப்பரணி கொண்டவன் முதற் குலோத் துங்கன். செம்பதத்து - பொருளால் செம்மையையுடைய சொற்களால். 24. ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலா, சீர்தந்த தாமரையாள் கேள்வன்' என்று தொடங்குகிறது. கூத்தன் - ஒட்டக் கூத்தர். 25. வெள்ாேக் களி உலா மாலை - கலிவெண்பாவால் ஆகிய உலா என்னும் டாமாலை. பிள்ளைத் தமிழ் மாலை - குலோத்துங்கன் பிள்ளைத் தமிழாகிய பாமாலை. பெற்றேன் - இரண்டாம் குலோத்துங்கன். ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கன் மீது உலாவும் பிள்ளைத் தமிழும் பாடியுள்ளார்.