பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 7 26. முன்நாய கரின் அவன் மூதுலாக் கண்ணிதொறும் பொன்ஆ யிரம்சொரிந்த பூபதியும்-என்னும்இவர் சகோதரர்கள் 27. மாசக்ரம் மேரு வலம்செல் மகரசல பூசக்ரம் ஏழும் புரந்ததற்பின்-தேசம் 28. பணியும் மனுகுலப் பாற்கடல் ஈன்ற - மணியும் அமுதமும் மானக்-குணபால் 29. உவந்த வளவர் குலவசலத் துச்சி நிவந்த பருதி நிகர்ப்ப-அவந்திமன் 30. வங்கமன் கங்கமன் ஆதியவர் வந்தித்த சங்கமன் தொல்லைத் தவம்போலப்-பங்கா 26. முன் நாயகரின் - முன்னிருந்த சோழ மன்னர்களைப் போல; அந்த மன்னர்கள் புலவர்களுக்குப் பொன் அளித்ததை நினைந்தது. மூதுலா - பழைய உலா, இந்நூல் பாடியதற்கு முற்பட்டதாதலின் இவ்வாறு கூறினர். இரண்டாம் இராசராச சோழனுலாவைக் குறித் தது இது. பூபதி - இரண்டாம் இராசராசன். கூடல், நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக், கொராயிரம்பொன் ஈந்த உலாவும்’ (தமிழ்விடு தூது.) 27. மாசக்ரம் மேரு வலம் செல் - பெரிய வட்டமான சூரியன் மேருவை வலமாகச் செல்வதற்குரிய இடமாகிய, மாசக்ரம்: ஆகுபெயர். மகரசல பூசக்ரம் ஏழும். கடல் சூழ்ந்த நிலவட்டம் ஏழையும்; மகர சலம் மகரமீன் உள்ள கடல். - 28. மனுகுலமாகிய பாற்கடல். மணி- சிந்தாமணி. குணபால் - கீழ்த்திசையில். 29. வளவர் குலமாகிய மலையின் உச்சியில் எழுந்து தோன்றிய கதிரவனைப் போல. குலவசலம் : தமிழ் முடிபு. அவந்தி மன் - அவந்தி நாட்டு அரசன். - 30. வங்க மன் - வங்கநாட்டு அரசன். கங்கமன் - கங்கநாட்டு அரசன். வந்தித்த - வணங்கிய சங்கமன் - சங்கரராச சோழனுடைய தந்தை. -