பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& சங்கர ராசேந்திர சோழன் உலா 31. எழும்திகிரி வெற்பை எனத்திகிரி யும்தன் செழுந்திகிரி யின்திமிரம் தீர்ப்ப-மொழிஅனைத்தும் 32. வல்லமன் ஆதி மனுவினும் மேதக்க நல்லமன் என்கின்ற நாயகற்கும்-தொல்லை 33. மலைக்கும் கடற்கும்நடு மண்முழுதும் காத்துச் சிலைக்கும்பா தாளத்தைச் சீறித்-தொலைத்துப் 34. பருந்து நிழற்பந்தர்ப் பல்லா யிரம்பேய் விருந்து களிப்ப விடுத்துக்-கருந்தலேயின் 35. குன்று குவித்துக் குவித்த பிணக்குவடு - சென்று குருதித் திரைமிதப்ப-வென்றதற்பின் 36. பூசற் குடகடற்கே போர்வாட் கறைகழுவித் தேசத் தொழியாத் திறைகொண்டு-காசினிக்கே 31. திகிரி வெற்பையென-சக்கரவாளகிரியில் இருளைப் போக்கியது போல. திகிரியும் - தன்னுடைய ஆக்ஞாசக்கரமும். செழுந்திகிரியின் வளப்பத்தையுடைய வட்டமான உலகத்தின். திமிரம் - இருளே என் றது. வறுமை முதலியவற்றை. தன்னுடைய ஆக்ஞாசக்கரத்தால் சக்கரவாளகிரி அளவும் ஆணே செலுத்தித் துன்பத்தைத் தீர்த்தது போலத் தன்னுடைய நாட்டிலும் துன்பத்தைத் தீர்த்தான் என்றபடி, அவன் ஆணைக்குரிய புற எல்லேயையும் அக எல்லையையும் கூறியபடி. கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோர், அடலாழி தனியேவு குலதீப ந்ருபதீப னருள்கூரவே" (தக்க. 6) என்பது காண்க. ) . 31-2. மொழி அனைத்தும் வல்ல மன் ஆதி மனு - எல்லாம் மொழி பும் வல்ல அரசனகிய ஆதி மனு, பின்னர் மனுச்சோழன் என ஒருவன் இருத்தலின் ஆதி மனு என்ருர். நல்லமன் - சங்கரராசனுடைய சகோதரன். 32-3. தொல்லை மலை - சக்கரவாள கிரி. இதுமுதல் 37-ஆம் கண்ணிவரை மூன்ரும் குலோத்துங்கன் பெருமை கூறப்படும். சிலைக்கும்ஆரவாரம் செய்யும். . 36. பூசல் - சண்டையிட்ட மேற்குத் திசையிலுள்ள நாடுகளை வென்று வாளின் இரத்தக் கறையை மேல் கடலில் கழுவினன். ஒழியா - இடையில் அரு.த. திறை - கப்பம். காசினிக்கே - உலகம் முழுதும்.