பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 9 37. பைத்த பொருபுலியைப் பல்கோடி வேந்தணிய வைத்த குமார மகீதரற்கும்-மெய்த்துணையாய்த் சங்கர சோழன் 38. தோற்றிய சங்கர ராசன் சுரராசன் போற்றிய கங்கா புரராசன்-சீற்றத் 39. துறைப்படு வேலால் ஒழித்தொழி யாது சிறைப்படு வேந்தர் திறையாய்-நிறைத்த 40. அரும்பொற் குவாலும் அடித்தளை விட்ட கரும்பொற் குவாலும் களுலப்-பரம்பும் 41. கடைத்தலே மும்முரசம் கண்இரட்ட ஒற்றைக் (தேன் குடைத்தலை அண்டமெலாம் கோலத்-தொடைத் 42. பலகளிக்கும் திண்டோட் பருப்பதத் தேந்தி உலகளிக்கும் நாளில் ஒருநாள்-நிலவெறிக்கும் 37. பைத்த - இளமையான பொரு புலியை - போர் செய்யும் புலியாகிய இலச்சினையை. தோல்வியுற்ற மன்னர்கள் பகைவர்களுடைய இலச்சினையை அணிந்து கொள்ளுதல் மரபு. குமார மகீதரன் - மூன்ரும் குலோத்துங்கன்; இவனுக்குக் குமார குலோத்துங்கன் என்பது ஒரு பெயர். மகீதரன் - உலகைத் தாங்கும் அரசன். துணை - சகோதரன். 38. சுரராசன் போற்றிய - இந்திரன் புகழ்ந்த. கங்காபுரம் - கங்கை கொண்ட சோழபுரம். சீற்றத்து - சினத்தினுல். 39. உறைப்படு வேலால் - உறையில் அமைக்கப்பட்ட வேலாயுதத் தால். ஒழித்து - இறந்துபடச் செய்து. திறை - காணிக்கை. 40. அரும்பொன் குவால்-அரிய பொன்குவியல், அடித்தளே விட்ட கரும்பொன்குவாலும் - அடியில் பூட்டிய விலங்குகளைத் தறித்துவிட்ட தல்ை அமைந்த இரும்புக் குவியலும்; கரும்பொன் - இரும்பு, களுலநெருங்க. பரம்பும் - பரவும். - 41. கடைத்தலை - திருவாசலில். மும்முரசம் கொடை, வெற்றி, மணம் ஆகியவற்றுக்குரிய மூன்று முரசங்கள். கண் - முரசில் அடிக்கும் பக்கம். இரட்ட மாறி மாறி ஒலிக்க. ஒற்றைக் குடைத்தலே - ஒரு குடையின்கீழ், கோலம் - அழகு. தொடைத்தேன் - மாலையில் உள்ள வண்டுகள். 41-2. தோளாகிய பருப்பதம். அண்டமெலாம் ஏந்தி.