பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா l I 50. பூங்கை மலரகத்துப் பொன்களில் தாம்பொறித்த வேங்கை வரைநீக்கி மிக்கனவும்-தாம்கொண்ர்ந்த 51. கங்கையின் நீர்தவிர நீருள் கவர்ந்தெல்லாப் பங்கய நீரும் பணித்ததற்பின்-வெங்களத்து. 52. வேந்தர் புகழை விழுங்கி அதுகாலக் - கூர்ந்த சுடர்வடிந்து கோத்தென்னச்-சேர்ந்த 53. உடைவாள் விசிகச்சும் ஒண்தவளத் துரசும் புடைவாள் எறிப்பப் புனைந்து-கடவுள் 54. இரவி பிறங்கடை உச்சிமோந் தென்ன விரவிய மெளலி மிலேந்து-புரிகாதில் 55. சால வினவுதமிழ்ச் செப்பொழுகும் தன்மையிற் கோல மகரக் குழைதுக்கி-வேல்விடுங்கைச் 49-51. மறையவர்களுக்குப் பொன்னத் தானம் செய்யும் செயலை ஆசிரியர் கூறுகிருர், தாம் பொறித்த வேங்கைவரை - சோழர்களாகிய தாம் வெட்டிய வேங்கை இலச்சினையையுடைய மேருமலை; கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று இமயமலையில் வேங்கை இலச்சினையைப் பொறித்தான் என்பது வரலாறு. இமயத்தையே மேருவாகச் செர்ல்லுவது கவி மரபு. மிக்கனவும் - எஞ்சினவற்றையும். தாம் கொணர்ந்த கங்கை : இராசேந்திர சோழன் வடநாடு சென்று மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொண்டுவந்தான் என்பது வர லாறு. பங்கய நீர் - தாமரை மலர்ந்த பொய்கையின் நீர்; பங்கயம் : ஆகுபெயர். - - 52-3. உடைவாளால் வேந்தரை வென்று அவர் புகழையெல் லாம் விழுங்கிப் பின் அதை அந்த வாள் உமிழ, அதன் ஒளி வடிந்து சேர்ந்தாற் போல வெள்ளைக்கச்சும் வெள்ளை ஆடையும் அணிந்தான். புகழ் வெள்ளை நிறமுடையது என்பது கவி மரபு. அது கால - அந்தப் புகழை உமிழ. கூர்ந்த சுடர் வடிந்து கோத்தென்ன - அதனால் மிகுந்த ஒளியானது வடிந்து கோத்தாற் போல. விசி - கட்டிய. தவளத்துாசுவெள்ளை ஆடை, கச்சும் தூசும் வெள்ளை நிறமுடையவை. வாள் எறிப்ப - ஒளி வீச. கச்சும் தூசும் புனைந்து. - - 53-4. கடவுள் இரவி - கதிரவனகிய தெய்வம். பிறங்கடை உச்சி மோந்தென்ன - தன் குலத்தில் தோன்றியவனுடைய உச்சியை மோந்து பார்த்தாற் போல. மெளலி - முடி. முடிக்குக் கதிரவன் உவமை. 55. தமிழ்ச் செப்பு - தமிழில் வாய் மலர்ந்த நூல்கள். மகரக் குழை - மகர மீன் வாயும் வாலும் கவ்வியது போன்று அமைத்த காதணி. இது தாழ்ந்து தொங்கும். தூக்கி - தொங்கவிட்டு.