பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 1 3 81. தண்ணந் திரிபுண் டரவெணிலாத் தையலார் கண்ணஞ் சகோரக் கணம்ஆர்த்திப்-பண்அமைத்த 62. காலைப் படிமக் கலத்துக் கலாமதிய மாலைப் பொருவும் வகைநோக்கி-மேலைமதி புறப்படுதல் 63. ஒன்று தவழ்பவழக் குன்றை உலகனைத்தும் சென்று கவிந்ததொரு செவ்வானைத்-தொன்றுதொட் 64, டோதிச் சுருதி உததிதரும் எப்பொருட்கும் ஆதிப் பொருளை அடிவணங்கிச்-சோதி 65. படைக்கும் தடமகுடம் பல்கோடி தம்மிற் புடைக்கும் புறங்கடை போந்து-கடைக்கணிப்ப 61. திரிபுண்டர வெணிலா-திருநீற்றுப் புண்டரமாகிய வெண்ணி லாவை, தையலார் கண் அம் சகோரக் கணம் ஆர்த்தி - பெண் களுடைய கண்களாகிய அழகிய சகோரப் பறவையினங்களை உண்ணச் செய்து. திருநீற்றுக்கு வெண்ணிலாவும் கண்களுக்குச் சகோரமும் உவமை. சகோரப் பறவை நிலாவை உண்ணும். 61-2, பண் அமைத்த காலை - இவ்வாறு அலங்காரங்களைச் செய்து நிரப்பிய வேளையில். படிமக் கலத்து-கண்ணுடியில். கலாமதியம் மாலை பொருவும் வகை நோக்கி - கதிர்களை உடைய சந்திரனுக்கு நடுவிலுள்ள திருமாலை ஒக்கும் வண்ணம் பார்த்து. கண்ணுடிக்கு மதியமும் சோழனுக்குத் திருமாலும் உவமை. 62-4. சிவபெருமான் பெருமை. 63. பவழக்குன்றை பவழமலை போன்ற சிவபெருமானை. சிவ பெருமானப் பவழக் குன்ருகவும் செவ்வானமாகவும் உருவகம் செய் தார், 64. சுருதி உததி - வேதமாகிய கடல். 65. தட மகுடம் பல்கோடி என்றது சோழனைக் காண வந்திருக் கும் பல மன்னர்களின் முடிகளே. தம்மில் புடைக்கும் - நெருக்கத்தி ல்ை தமக்குள் ஒன்ருேடொன்று மோதிக் கொள்ளும், புறங்கடை - அரண்மனை வாயில். கடைக்கணிப்ப - மன்னர்களைக் கடைக்கண் ல்ை நோக்க.